Friday, April 11, 2025

Saturday, 3 December 2011

மனைவியின் தலையு��ன் காவல்நிலையம் போன கணவன்! (படங்க��் இணைப்பு) பலவீன��ான இருதயம் உள்ளவர்கள் பார்க்க வே���்டாம்!!



சேலம் மாவட்டம் எடப்பாடி நகரை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமம் சின்ன மணலி. இங்குள்ள பன்னியாண்டி தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 41). ராஜாவின் மனைவி பெயர் சரோஜா (வயது 38).

ராஜா சைக்கிளில் சென்று எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் சோப்பு டப்பா, சீப்பு. கண்ணாடி போன்ற சிறிய இரக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தார். கணவனின் தொழிலுக்கு உதவியாக மனைவி சரோஜாவும், எடப்பாடி நகரிலும், பேருந்தில் சென்று விற்பனை செய்யக்கூடிய ஊர்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுசென்று வியாபரம் செய்து வந்தார். இந்த பிளாஸ்டிக் பொருட்ட்களை ஈரோட்டில் உள்ள ஒரு கடையில் மொத்தமாக கொள்முதல் செய்து வந்துள்ளனர்.

இந்த தம்பதிகளுக்கு கோபால் (வயது 21), மல்லிகா (19), மகேஸ்வரி (17) என்ற இரண்டு பெண்களும் உள்ளனர். ஈரோட்டில் உள்ள கடைக்கு சரக்கு வாங்கப்போன போது அந்தகடைகாரருக்கும் ராஜாவின் மனைவி சரோஜாவுக்கும், கூடாநட்பு தொடகியுள்ளது.

எடப்பாடியில், வாரச்சந்தை நடக்கும் புதன் கிழமையன்று பன்றிக்கறி கடை போடுவதால் அந்த நாளில் ராஜாவால், ஈரோட்டுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க செல்லமுடியாது என்பதால், ஈரோட்டுக்கு சென்றுவரத் துவங்கினார் சரோஜா.

ராஜா இல்லாமல் சரோஜா மட்டும் அடிக்கடி ஈரோட்டுக்கு சென்று வர ஆரம்பித்தார். சில சமயம் அடுத்தநாள் காலையில் வீட்டுக்கு வந்துள்ளார். ஏன் லேட்டானது என்று கேட்டு சத்தம்போட்டுள்ளார் ராஜா. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை சரோஜா. சரோஜாவின் நடவடிக்கையை கண்டித்தார் ராஜா.

கணவன் மனைவிக்குள் சிக்கல் உறுவானது. ஒரு கட்டத்தில் ஈரோட்டில் உள்ள அந்த கடையின் உரிமையாளர் எடப்பாடிக்கு வரத்தொடங்கினார். கணவன் வியாபாரத்துக்கு போன நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். என்னம்மா அந்த ஆளு இங்கயே வாரான்... உனக்கும் அவனுக்கும் தப்பான தொடர்புன்னு வெளியில பேசராங்க.... ஒரு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சாச்சு, கல்யாண வயசுல இன்னொரு பொண்ணு இருக்குது, பாத்து நடந்துக்கம்மா என்று மனைவியை கடித்தார் ராஜா.

எனக்கும் அவருக்கும் தொடர்பு இருக்குது ஊருல பேசறது உண்மை தான். அவர் இல்லாட்டி நான் செத்துருவேன். சும்மா இல்லை என்னுடைய சாவுக்கு நீதான் காரணம் என்று எழுதிவைத்துவிட்டு தான் சாவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால், ராஜாவின் குடும்பத்தில் தினமும் சண்டை நடக்க துவங்கியுள்ளது, கணவனின் கட்டுபாட்டை இழந்தார் சரோஜா, சரோஜாவுக்கு நினைத்த நேரமெல்லாம் ஈரோட்டில் இருந்து செபோனில் அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

அழைப்பு வந்தால் மணிக்கணக்கில் சரோஜாவும், அந்த கடை முதலாளியும் பேசி மகிழ்துள்ளனர். அதே நேரத்தில் ராஜா மன உளைச்சலில் வேலைக்கும் போகாமல் வீட்டிலும் இருக்க முடியாமல் துடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

பொறுமையிழந்து சில சமயம் மானைவியை அடித்து உதைத்துள்ளார், இதனால் கணவன் மீது வெறுப்பு கொண்ட சரோஜா கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து வைத்துள்ளார். சாப்பாட்டில் கெட்ட வாசம் அடித்ததால் சந்தேகப்பட்ட ராஜா சாப்பாட்டை எடுத்து கீழே கொட்டிவிட்டார். ஒரு கட்டத்தில், என்னை அவருடன் போகக்கூடாது என்று சொன்னால் நான் உன்னை தீர்த்து கட்டிவிடுவேன் என்று கணவனை மிரட்டியுள்ளார் சரோஜா.

கணவன் மனைவி இருவருக்கும் 01.12.2011 (நேற்று) அன்று மதியம் சண்டை துவங்கியுள்ளது, வீட்டில் பன்றி அறுக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்து சரோஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, மனைவியின் தலையில் இருக்கும் முடியை அப்படியே கொத்தாக பிடித்து தூக்கி தோலில் போட்டபடி வீட்டிலிருந்து எடப்பாடி காவல் நிலையத்துக்கு வந்துள்ளார் ராஜா.

மனைவிய கீழே தள்ளி நெஞ்சின் மீது காலை வைத்துக்கொண்டு கழுத்தை அறுத்த போது, சரோஜாவின் கழுத்தில் இருந்து பீறிட்டு வெளியில் வந்த ரத்தம் ராஜாவின் முகம் தலைமுடி எல்லாம் தெரித்துள்ளது, அதனால் ராஜாவின் சட்டை முழுவதும் ரத்தத்தால் நனைந்து போயிருந்தது.

காவல்நிலையத்துக்கு போகும் வழியில், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் ராஜாவின் கோலத்தை பார்த்து, என்னவோ...? எதோ தெரியவில்லை என்று பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ராஜா, இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொலி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன் என்று அணைவரிடமும் மனைவியிண் தலையை காட்டியபடியே காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார் ராஜா.

ஜலகண்டாபுரம் செல்லும் சாலையில் உள்ள காவல் நிலையத்துக்கு போகும் வழியில் இருந்த மக்களிடம் கள்ளக்காதல் செய்யாதீர்கள்... என்று பெண்களிடமும், உம் பொண்டாட்டிய விட்டுட்டு அடுத்தவன் குடும்பத்தை கெடுக்காதீங்க.... என்று ஆண்களிடமும் பிரச்சாரம் செய்தபடியே நடந்து போய் காவல் நிலையத்தில் மனைவியின் தலையை வைத்து விட்டு சரணடைந்துள்ளார்.

எதுக்கப்பா இப்படி கொலை செய்துட்டு ஜெயிலுக்கு போகணும், பேசாம அவள விட்டுட்டு போகவேண்டியதுதானே...? என்று கேட்ட ஆய்வாளர் செல்வராஜிடம்,

"அய்யா நான் இரண்டு வருசமா தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு இருந்தேனுங்க.... சொந்தக்காரங்க, உள்ளூர் ஜனங்க, பக்கத்துல இருக்கறவங்க... பெத்த புள்ளைங்க மொகத்துல முழிக்க கூட முடியாம தலைகுனிஞ்சு இருந்தேனுங்க... ஆனா இப்ப எனக்கு மனசு சந்தோசமா இருக்குதுங்க... இப்ப யார பார்க்கவும் பயம் இல்ல, கேவலமா இல்ல, நல்லா தூங்கி ரெண்டு வருசமாச்சு.... இனிமேதான் நான் நிம்மதியா தூங்க முடியும் என்று சொல்லியுள்ளார் ராஜா.

மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு மனிதன் மானமுள்ளவன் என்பதுதான் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லியுள்ளார்.

மனிதன் மட்டுமே மானம் என்கின்ற உணர்வுகளால் தூண்டப்படுகிறான். அதற்க்கு ஒரு சாட்சிதான் எடப்பாடி ராஜாவும்...








http://actressmasaala.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger