பவர் ஸ்டார் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் நடிகர் டாக்டர் சீனிவாசன், நடிகை நித்யா மேனனுக்கு குறி வைத்து மூக்குடை பட்டிருக்கிறார். நித்யா மேனனுக்கு கேரளாவில் ரெட் கார்ட் போட்டிருக்கிறார்கள் என்பதால் தான் கூப்பிட்டவுடன் வந்து நடிப்பார் என்ற எதிர்பார்ப்பாலோ என்னவோ, நடிகை நித்யாவை தொடர்பு கொண்ட பவர் ஸ்டார், நான் ஹீரோவா நடிக்கிற ஒரு படத்தில் என்னுடன் ஜோடியா நடிக்க நீங்க ரெடியா? அப்படி ரெடி என்றால் ஒரு கோடி சம்பளம் தருகிறேன் என்றாராம். ஐம்பதே தாண்டாத நித்யா, ஒரு கோடி என்றதும் ஒரேயடியாக தாண்டிக்குதித்து வந்துவிடுவார் என்பது அவரது கால்குலேஷன்.
ஆனால் அதற்கு நித்யா மேனன் சொன்ன பதில்தான் கோடம்பாக்கமே கூடி நின்று பேசும் மேட்டர். சாரிங்க... நான் சீனியர் சிட்டிசனுடன் நடிப்பதில்லை, என்று கூறி நோஸ் கட் கொடுத்திருக்கிறார் நித்யா மேனன். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மூன்றாவது அணியாக போட்டியிட்டு 50க்கும் குறைவான ஓட்டுக்களை வாங்கி தோற்றபோது வருத்தப்படாதவரா, நித்யாவின் பேச்சைக் கேட்டு வருத்தப்பட போகிறார். வழக்கம்போலவே சிரித்த முகத்துடன் வேறு நாயகியை தேட ஆரம்பித்து விட்டாராம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?