விரலை பிடித்து உருவினால் கூட, விலகி ஓடும் நடிகர்களுக்கு மத்தியில் விமல் செய்த ஒரு காரியம் இன்டஸ்ட்ரியையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. பொதுவாக தான் நடிக்கும் படங்கள் ஓடாவிட்டால் அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்திக்கவே அஞ்சுவார்கள் பெரும்பாலான ஹீரோக்கள். படம் நல்லா ஓடுனா நமக்கா கொடுக்க போறாரு? என்றொரு கேள்வியையும் கேட்பார்கள் கூடவே.
இவர்களுக்கு மத்தியில்தான் இப்படி ஒரு காரியத்தை செய்து கண்கலங்க வைத்திருக்கிறார் விமல். என்னவாம்?
வாகை சூடவா படத் தயாரிப்பாளர் முருகானந்தம் அப்படத்தின் தோல்விக்கு பின்பு படு சிக்கலுக்குள்ளாகியிருக்கிறார். அவருக்கு உதவும் விதத்தில், தான் வாங்கிய ஐம்பது லட்ச ரூபாய் சம்பளத்தையும் சுளையாக திருப்பி கொடுத்துவிட்டார் விமல்.
தன் கையில் பணமில்லாத நிலையிலும் இரண்டு படங்களை ஒப்புக் கொண்டு அதில் கிடைத்த அட்வான்சுடன், மிச்ச மீதி தொகையை நாலு இடத்தில் புரட்டியும் கொடுத்தாராம். இதோடு நிறுத்தியிருந்தால் கூட ஆச்சர்யமில்லை. ஒரு படத்தில் இலவசமாகவே நடிச்சு தர்றேன். கவலைப்படாதீங்க என்றும் கூறியிருக்கிறாராம்.
ஈசான்ய மூலையில் எப்பவாவது மேகம் திரளுதுன்னா அது இவங்களை மாதிரி ஆட்களால்தான்…
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?