நடிகை வனிதா சின்னத்திரை நடிகர் ஆகாஷை ஏற்கனவே திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஹரி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பின்னர் ராஜன் ஆனந்த் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
ஆகாஷூடன் வசிக்கும் மகன் ஹரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வனிதா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஹரி தாயுடன் செல்ல மறுத்து விட்டான்.
தற்போது இரண்டாவது கணவர் ராஜன் ஆனந்துடனும் வனிதாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. முதல் கணவர் ஆகாஷுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சமீபத்தில் வனிதா பேட்டி அளித்து இருந்தார்.
இந்த நிலையில் வனிதாவும், 2-வது கணவர் ராஜன்ஆனந்தும் இன்று காலை ஐகோர்ட்டில் உள்ள குடும்பநல கோர்ட்டுக்கு வந்தனர். இருவரும் பரஸ்பர முறையில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
2007ல் திருமணம் நடந்து. கடந்த ஆகஸ்டு முதல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறோம். பரஸ்பர முறையில் இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்திருப்பதால் எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் இந்த மனுவை தாக்கல் செய்தனர். அப்போது அவர்களின் வக்கீல் விஜயராஜ் உடன் இருந்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?