Friday 30 September 2011

கிருஷ்ணகிரிய எதுக்கு கிழிக்கணும் பதிவர்களே?

 
கிருஷ்ணகிரியைஆளாளுக்கு கிழித்து தள்ளுகிறார்கள்.கிழிந்துபோய் மழை பெய்தால் வீடு,ரோடு என்றுஎல்லா இட்த்திலும் விழுகிறது.இங்கே சிறு பையனைக்கூட ஏமாற்ற முடியாது.ஸ்கூட்டர்எப்படி ஓடுகிறது என்று கேட்டுப்பாருங்கள்''டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்''என்று தெளிவாக பதில்வரும்.

உலகமறிந்தரஜினிகாந்த்,ராஜாஜி எல்லாம் இந்த மாவட்ட்த்தில் பிறந்தவர்கள்.ரஜினிகாந்தின் அண்ணனைஅடிக்கடி இங்கே பார்த்திருக்கிறேன்.இங்கே விளையும் மாம்பழத்தை சுவைக்காத உலகநாடுகள் குறைவு.கிரானைட் கற்களையும் நாடுகள் பார்த்திருக்கின்றன.பெரும்பாலானநாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி ஆகிறது.

மற்ற மாவட்டங்களைஒப்பிடும்போது இங்கே சீதோஷ்ண நிலை நன்றாக இருக்கும்.பெங்களூருக்கு அருகில்இருக்கிறது.ஓசூர் நிறைய பேருக்கு தெரியும்.தொழில் நகரம்.எல்லா மாவட்ட்த்துஆட்களையும்,மாநிலத்து ஆட்களையும்,வெளிநாட்டினரையும் இங்கே பார்க்க முடியும்.

ஓசூருக்கு அருகில்தளி என்ற ஊர் இருக்கிறது.தொகுதியும் கூட!"லிட்டில் இங்கிலாந்து" என்று சொல்வார்கள்.பெரும்பாலான வீடுகளில் மின்விசிறியை பார்க்க முடியாது.இங்கிலாந்தில் நிலவும் தட்பவெப்ப நிலைதான்இங்கும்.காய்கறி,கீரைகள் அதிகம் பயிரிடுவார்கள்.விலையும் மிக குறைவு.ஃப்ரெஷ்ஷாகஇருக்கும்.

பணிபுரிபவர்கள்யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை.பெரும்பான்மையானவர்கள் தெலுங்கு,கன்னடம் பேசும்மக்கள்.அதனால் தேசியக் கட்சியின் ஆதிக்கம்தான் அதிகம்.இப்போது இருப்பவர்கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.இங்கே தோழர்கள் அதிகம்.தமிழ் ஓரளவு பேசுவார்கள்.உங்களுக்குஎன்ன வேண்டும் என்று கேட்டால்" என் பேர் சிக்கம்மா! என்பார்கள்.

யானைகள் அடிக்கடிகிராமத்திற்கு வந்து பீதியூட்டுவது இம்மாவட்ட்த்தில் அதிகம்.பாம்புகளும்அதிகம்.சென்ற மாதம் மியூஸியத்தில் பாம்பு படக் கண்காட்சி வைத்திருந்தார்கள்.போய்பார்த்தேன்.இத்தனை வகை பாம்புகளா? மலைப்பாம்பு கூட கிராமப்புறத்திற்குவருவதுண்டு.கறி சமைத்து சாப்பிடுவதை நாளிதழில் செய்தியாக போட்டார்கள்.

5 தேசியநெடுஞ்சாலைகள் கிருஷ்ணகிரியை தொட்டுச்செல்கின்றன.விபத்துகளும் அதிகம் நடக்கின்றன.இன்றையமுதல்வர் போட்டியிட்டு வெற்றியும் தோல்வியும் பெற்ற பர்கூர் தொகுதிகிருஷ்ணகிரியில் இருக்கிறது.வாழப்பாடி ராம்மூர்த்தி,இ.வி.கே.எஸ் இளங்கோவன் எல்லாம்இங்கே போட்டியிட்டவர்கள்.

டி.ராஜேந்தர்எதிர்த்து போட்டியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.சைக்கிள் சின்னம் கேட்டுகொடுக்காமல் ரயில் எஞ்சின் சின்னம் கொடுத்தார்கள்.அப்போது கிருஷ்ணகிரி மாவட்டமாகபிரிக்கப்படவில்லை.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமளிதுமளிப் பட்ட்து.சிங்கத்தின்கர்ஜனையை அப்போது நேரில் பார்த்தேன்.

கிருஷ்ணகிரிஅணை இருக்கிறது.நான் ஃப்ரெஷ் மீன் சாப்பிட செல்வது வழக்கம்.விஜய்,அவரது தந்தைக்கு காவேரிப்பட்டிணம்அருகில் உள்ள கோயில் விருப்பமானது.எஸ்.ஏ.சந்திரசேகர் அடிக்கடி வருவதுண்டு.அழகிபடம் எடுத்த உதயகுமார் இந்த ஊரைச்சேர்ந்தவர்.மிக இளைய மாவட்டம்.ஆனால் பதிவுலகில்கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.அவ்வ்வ்வ்வ்வ்வ்......

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger