ஒரு ஊரில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார், அவர் அமைதியாக இருக்க விரும்புகிறவர் சத்தம் கொஞ்சம் கூட பிடிக்காது. ஆனால் அவர் வீட்டு முற்றத்தில் வந்துதான் சிறுவர்கள் சத்தம் போட்டு விளையாடுவார்கள்.
பெரியவருக்கோ கோபம் கோபமாக வந்தாலும் அடக்கிகொள்வார். ஏதும் சொன்னால் அவர்கள் வீட்டில் போயி வத்தி வைத்து விடுவார்களே என பயந்தார். தீவிரமாக நம்ம கோமாளி செல்வா மாதிரி யோசித்தார்.
அடுத்தநாள், சிறுவர்கள் விளையாடி முடித்ததும், அவர்களை அழைத்தார். ஒரு பத்து ரூபாயை அவர்கள் கையில் கொடுத்து, நீங்கள் இங்கே வந்து விளையாடுவது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது, எனவே தினமும் நன்றாக விளையாடுங்கள் என்றார்.
அடுத்தநாளும் இதே போல சொல்லி பணம் கொடுத்தார். சிறுவர்களுக்கோ தாங்கொணா மகிழ்ச்சி, கடையில் போயி மிட்டாய் வாங்கி தின்று விட்டு சந்தோசமாக விளையாடினார்கள்.
இது தினமும் தொடர்ந்தது.....
ஒருநாள் திடீரென பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். சிறுவர்களும் இன்று இல்லைன்னா நாளை தருவார் என விளையாடி சென்றனர். சுத்தமாக பணம் கொடுப்பதை பெரியவர் நிறுத்தவே....
சிறுவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டனர், டேய் தாத்தா இப்பல்லாம் காசு தர்றதே இல்லை அப்புறம் எதுக்கு நாம அங்கே விளையாடப்போகனும்...?? வாங்க இனி நாம வேற இடத்துக்கு போகலாம்னு கிளம்பினார்கள். பெரியவர் மனசுக்குள் சிரித்துக்கொண்டே, தன் தந்திரத்தை எண்ணி சந்தொசப்பட்டுக்கொண்டார்.
நீதி : எதையும் பிளான் பண்ணி பண்ணனும்.
டிஸ்கி : இது சின்னபிள்ளையில எங்கயோ கேட்டதோ, படிச்சதோ ஞாபகம் இல்லை.
ஆச்சர்யமான, நட்சத்திரங்களின் அரிதான படம், நண்பன் ரவிகுமார் பேஸ்புக்ல சுட்டது...!!!!
http://tamil-message.blogspot.com
http://tamil-message.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?