Friday, 30 September 2011

காதலியை,உறவுகளை புரிந்துகொள்ள கஷ்டமா இருக்கா?

 
 
காதலர்கள்,தம்பதிகள்,நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரிடமும்பிளவுகள் இல்லாதஉறவுகளையே எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.நேசமானகுழப்பம் இல்லாத உறவுகளுக்குமற்றவரை புரிந்து கொள்வதுதான்தீர்வு.ஒருவரை ஓரளவேனும் அறிந்துகொள்வதன் மூலம் அவருக்கு மிக நெருக்கமாகஉணரமுடியும்.அவரது நம்பிக்கையை பெறுவதன் மூலம் உங்கள் வளர்ச்சிக்குஉற்றதுணையாக இருப்பார்.
 
காதலர்கள்,தம்பதிகள் ஒருவரைஒருவர் புரிந்துகொண்டால்குடும்பச்சிதைவை தடுக்க முடியும்.உங்கள் பணியாளரை புரிந்துகொண்டுஉதவும்போது ஆத்மார்த்தமாகபணி செய்வார்.மற்றவர்களை புரிந்துகொள்வதற்கு நீங்கள்கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மனிதன் தன்னைப்பற்றிமற்றவருக்கு உணர்த்தவார்த்தைகளையும்,அங்க அசைவுகளையும் வெளிப்படுத்துகிறான்.எனவே,அவரைஉற்றுநோக்கவேண்டும்,சொல்வதை கவனமாக கேட்கவேண்டும்,அவரது உணர்வுகளை கவனிக்கவேண்டும்.இது எளிதானதுதான்.ஒவ்வொன்றாகபார்க்கலாம்.
 
உண்மையை உணர்த்தும் உடல்மொழி !
 
படிப்பெதுவும் தேவையில்லை.கண்களைஉற்று கவனியுங்கள்.உங்களுக்குஎல்லாவற்றையும் சொல்லிவிடும்.அவரதுகைகள்,கால்கள்,முகபாவம்என்னசொல்கிறது என்பதை பொறுமையாககவனியுங்கள்.ஒருவரை பார்த்தவுடன் சோகமாகஇருப்பதை,கோபமாக இருப்பதைநம்மால் சொல்லமுடியும்தானே!அசட்டுச்சிரிப்பா?சந்தோஷ சிரிப்பா?சோக சிரிப்பா?என்பதை உணர உங்களால்முடியும்.சில நேரங்களில்யாரையோஏன் டென்ஷனாகஇருக்கிறீர்கள்?என்றுகேட்டிருக்கிறீர்கள்.அது எப்படிஉங்களுக்கு தெரிந்தது?இன்னும் இன்னும்கவனம் செலுத்துங்கள்.ஒருவரதுஉணர்வுகளை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.சரியான எதிர்வினையும் உங்களிடம் உருவாகும்.
 
கவனமாக கேளுங்கள் :
 
உடல் மொழிகளுக்கு அடுத்து ஒருவரதுவார்த்தைகள்தான் அவரை நமக்கு உணர்த்துகிறது. வார்த்தைகளில் உள்ள உணர்ச்சியைஅடையாளம் காணுங்கள்.அதற்குஏற்றவாறு சரியான வார்த்தைகளை நீங்கள்வெளிப்படுத்துங்கள்.ஒருவர் துக்ககரமான வார்த்தைகளை பேசும்போதுநீங்கள் சிரிக்கமாட்டீர்கள் இல்லையா?
 
ஒருவர் எப்படி உணர்கிறார்?
 
ஒரே சம்பவம்உங்களிடத்திலும்,உங்கள்நண்பரிடத்திலும் ஒரே உணச்சியைத்தான்தோற்றுவிக்கும் என்பதுநிச்சயமல்ல!இருவருக்கும் வேறுவேறுநம்பிக்கைகள்,கொள்கைகள் உள்ளன.எனவே,அவரது உணர்வுகளைகவனியுங்கள்,அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.உங்களுக்குசாதாரணமாக தோன்றும் ஒரு விஷயம் அவரிடம் கொந்தளிப்பைஏற்படுத்தலாம்.நீங்கள் புரிந்து கொண்ட அந்த உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துங்கள்.ஆங்கிலத்தில்Empathy என்றொருசொல் இருக்கிறது.நீங்கள்உணர்வதையே நானும் உணர்வது.கொஞ்சம்அக்கறையும்,மனிதநேயமும்இருந்தால் சாத்தியம்தான்.இருவரும் ஒரே மாதிரி உணர்ந்தால்குழப்பத்துக்கும்,பிளவுக்கும்அங்கே என்ன வேலை?
 
மேலும் சில துளிகள் ..............
  • ஆம்.கண்களை கவனிக்கவும்.
  • கவனமாக கேட்கவும்
  • அவரும் உங்களைப்போல மனிதர்தான்.
  • ஒவ்வொருவருக்கும் மதிப்பீடுகள் வேறுபடுகின்றன.
  • உணர்வுகளை கண்டறியுங்கள்
  • ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்களால் புரிந்து கொள்ளமுடியும்.முயற்சி செய்யுங்கள்.மதிப்பு மிக்க உறவுகள் உங்களுக்குகிடைக்கும்.அமைதியும்,சந்தோஷமும்உங்கள் வாழ்வில் நிலை பெறும்.(தலைப்பு மாற்றப்பட்ட மீள்பதிவு)

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger