"தற்போதுள்ள எம்.பி.,க்களில் 150 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அடுத்த தேர்தலில் ஓட்டளிக்கும்போது, இது போன்ற உதவாக்கரை நபர்களை மீண்டும் எம்.பி.,க்களாக மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது,'' என, காந்தியவாதி அன்னா ஹசாரே பேசினார். ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும், அன்னா ஹசாரேயின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதிக்கு பின், அவர் மேடையில் பேசவில்லை. நேற்று, அவர் மேடையில் பேசுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இருந்தாலும், நேற்று காலை 10 மணிக்கு, அன்னா ஹசாரே மேடைக்கு வந்தார். அப்போது, அங்கு கூடியிருந்தவர்கள், "பாரத் மாதா கி ஜே' என, குரல் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, அன்னா ஹசாரே பேசியதாவது: என்னுடைய சுயநலனுக்காக இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, உண்ணாவிரதம் இருக்கிறேன். பலமான லோக்பால் மசோதா, பார்லிமென்டில் நிறைவேறும் வரை, என் போராட்டம் தொடரும். இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை, என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும். எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த போராட்டத்துக்கு மக்கள் தரும் ஆதரவு, எனக்கு பெரும் சக்தியை அளித்துள்ளது. கடைசி மூச்சு உள்ளவரை போராட்டம் நடத்துவேன். நான் சாதாரணமான நபர். எனக்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு, ஆச்சர்யம் அளிக்கிறது. மக்களுக்காக பணியாற்றும்படி, கடவுள் தான் என்னை தேர்வு செய்துள்ளார். தற்போதுள்ள எம்.பி.,க்களில் 150 பேர் மீது, குற்ற வழக்குகள் உள்ளன.
இப்படிப்பட்ட உதவாக்கரை எம்.பி.,க்களை, அடுத்த தேர்தலில், மக்கள் தேர்வு செய்யக்கூடாது. எம்.பி.,க்களிடம் மக்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது. அதை அவர்கள் நிறைவேற்றுவது இல்லை. நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, உதவாக்கரை எம்.பி.,க்களை தேர்வு செய்யாதீர்கள் என, மக்களிடம் பிரசாரம் செய்யப் போகிறேன். மக்கள் சக்தி, எம்.பி.,க்களின் சக்தியை விட அதிகம். மக்களுக்கு சேவை செய்பவர்கள், ஒழுங்காக சேவை செய்யாவிட்டால், மக்கள் அவர்களை தூக்கியெறிந்து விடுவர். இவ்வாறு ஹசாரே பேசினார்.
http://naamnanbargal.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?