Sunday, 28 August 2011

அன்னா ஹசாரே மேற்���ொண்ட உண்ணாவிரத ��ோராட்டம் வெற்றி : உண்ணாவிரதம் வாபஸ் ஆகிறது?



 அன்னா ஹசாரே விதித்த நிபந்தனைப்படி லோக்பால் மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து அவரது போராட்டம் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

அன்னா ஹசாரே டெல்லியில் இன்று 12வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது நிபந்தனைப்படி லோக்பால் மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடந்து வருகிறது.

இந் நிலையில் லோக்பால் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் மட்டும் நடத்தினால் போதாது, அதை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது ஓட்டெடுப்பும் நடத்த வேண்டும் என்றும் புதிய நிபந்தனையை இன்று காலை விதித்தார் ஹசாரே.

இல்லாவிட்டால், லோக்பால் நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன். என்னால் இன்னும் 3 அல்லது 4 நாட்கள் வரை கூட உண்ணாவிரதம் இருக்க முடியும்' என அன்னா ஹஸாரே கூறிவிட்டார்.

இதையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வருவதில் சிக்கல் எழுந்தது.
இதற்கிடையே அன்னா ஹசாரேயின் உடல்நிலை இன்று காலை மிகவும் மோசமானது. அவரது இதய துடிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பபார்க்கப்பட்டது. ஆனால் அன்னா ஹசாரே தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார். நேற்று எதுவும் பேசாமல் அமைதியாக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே இன்று காலை தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். 

அவர் கூறுகையில், "ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை எனது போராட்டம் தொடரும். என்னால் இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு கூட உண்ணாவிரதம் இருக்க முடியும். எனக்கு எதுவும் ஏற்பட்டு விடாது. எனது கடைசி மூச்சு இருக்கும்வரை போராடுவேன். 

தனிப்பட்ட நலன் அல்ல...
லோக்பால் நிறைவேறும் வரை எனது மூச்சு ஓயாது. எனது தனிப்பட்ட நலனுக்காக நான் இந்த போராட்டத்தை நடத்த வில்லை. அப்படி சுயநலத்தோடு செய்து இருந்தால் 5 நாட்களில் அது முடிந்திருக்கும்.

எனவே லோக்பால் நிறைவேறும் வரை எனது போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருக்கிறேன். 

நாடு முழுவதும் மக்கள் கொடுக்கும் ஆதரவு எனக்கு புதிய தெம்பைக் கொடுக்கிறது. எனவே எதற்கும் நான் அஞ்சுவதாக இல்லை. பின்வாங்கவும் மாட்டேன். 

சாதாரண என்னை போன்ற ஒருவருக்கு நாடு முழுவதும் இத்தகைய ஆதரவு கிடைத்து இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. கடவுள் என்னை கைகாட்டி இருப்பதால் இதை செய்கிறேன். கடவுள்தான் அனைத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறார்," என்றார்.

இதைத் தொடர்ந்து அன்னா தரப்புடன் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்றும் தொடர்ந்து பேச்சு நடத்தினார். அன்னா தரப்பு மிகவும் பிடிவாதம் பிடித்ததால், இந்த மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தத் தயார் என மத்திய அரசு திடீரென ஒப்புக் கொண்டது.

இதை அன்னா ஹசாரே தரப்பும் வரவேற்றது. மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி தருவதாக அன்னாவின் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜரிவால் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அனைத்து எம்பிக்களும் அவையில் இருக்குமாறு காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் தங்களது எம்பிக்களையும் கூட்டணிக் கட்சி எம்பிக்களையும் கேட்டுக் கொண்டுள்ளன.

இதையடுத்து முதலில் ராஜ்யசபாவிலும் பின்னர் லோக் சபாவிலும் இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு சமர்ப்பித்து குரல் வாக்கெடுப்பு நடத்தும் என்று தெரிகிறது.

இந்த குரல் வாக்கெடுப்பு நிறைவேறியவுடன் அந்த தீர்மானத்தை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டு அதை அன்னா ஹசாரேவிடம் தர மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ராம்லீலா மைதானம் செல்கிறார்.

இதையடுத்து அன்னா ஹசாரே இன்றிரவே தனது உண்ணாவிரதத்தைக் கைவிடும் முடிவை அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

ஆனால், இதையும் மீறி ஹசாரே தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால் இன்று இரவில் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அரசுத் தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger