Img புதுடெல்லியில் வீட்டில் இருந்து ஓடிய சிறுமி நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு New Delhi girl molested 4 people
புதுடெல்லி, டிச. 12-
உத்தரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்த சிறுமி வீட்டு பிரச்சனை காரணமாக பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அவர் ரெயில் மூலம் புதுடெல்லி சென்றுள்ளார். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம், நான் ரெயில் இருந்து கீழே இறங்கியதும், நான்கு பேர்கள் கொண்ட கும்பல் என்னை கடத்தி சென்று சிந்தியா ஹவுஸ்க்கு பின்புறம் கொண்டு சென்று கற்பழித்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
சிறுமி இன்று காலை அங்குள்ள பார்க்கிங் ஒன்றில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவரை பார்த்த சிலர் அங்குள்ள ஆர். எம்.எல். மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமி கற்பழிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சிறுமி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவளிடம் இருந்து மேலும், சில தகவல்களை பெற நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?