Img நந்தன் நீல்கேணி காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளரா? சோனியா ஷாக் முடிவு Nandan nilekeni Congress Partys prime minister candidate Sonia Shock
புதுடெல்லி, டிச.11-
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீல்கேணியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இம்முயற்சியை கடுமையாக விமர்சித்த நாளேடு ஒன்று இது குப்பைத்தனமான முடிவு என விமர்சித்துள்ளது. இது குறித்து சல்மான் குர்ஷித் கூறும்போது, எங்களுக்கென்று தலைவர்கள் உள்ளனர், அவர் எங்களோடு இணைந்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பணியாற்றி வருகிறார் என தெரிவித்துள்ளார்.
நீல்கேணி தெற்கு பெங்களூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாக ஊர்ஜிதப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் இம்முடிவை சோனியா காந்தி எடுத்துள்ளதாக தெரிகிறது.
நான்கு மாநில சட்டப்பேரவை முடிவுகளுக்கு பின் சோனியாவை சந்தித்த தலைவர்களான திக் விஜய் சிங்கும், ஜோதிராதித்ய சிந்தியாவும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தபோதிலும் இதை ஏற்க ராகுல் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2009ஆம் ஆண்டு இந்தியா இங்க்-ன் உயர்ந்த பதவியில் இருந்து விலகிய நீல்கேணி தனிச்சிறப்பு அடையாள அட்டை ஆணையத்தின்(ஆதார்) தலைவராக பதவியேற்று, அரசின் உதவிகளை ஏழைகள் நேரடியாக பெற்றிட ஏதுவாக ஆதார் அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் முடிவடைந்தால் உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் தகவல் களஞ்சியமாக இருக்கும் என கூறப்படுகிறது.
பிரதமர் வேட்பாளராக நீல்கேணியை அறிவிக்கும் விவகாரம் குறித்து எம்.பி.க்களிடம் கருத்து கேட்டபோது:
இன்று அரசியலில் எதுவும் நடக்க வாய்ப்புள்ளது என்று பா.ஜனதாவின் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்தார். சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கிடம் கேட்டபோது, அது காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரம் என்றார். எனினும் அக்கட்சி உறுப்பினர் ராம் கோபால் யாதவ், யார் இந்த நீல்கேணி? என்று கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி கூறும்போது, நாட்டில் யாருக்கு அவரை தெரியும்? என்றும் காங்கிரஸ் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்குமானால் அதைப்பற்றி நாம் என்ன கூறமுடியும்? என்றார். ராகுல் தான் சிறந்த தேர்வாக இருக்கமுடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?