Img ரஜினிகாந்துக்கு 64 வது பிறந்தநாள்: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து Rajinikanth 64th birthday pon radhakrishnan wishes
சென்னை, டிச.12-
நடிகர் ரஜினிகாந்த் இன்று(வியாழக்கிழமை) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
64-வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடனும், நிரந்தர ஆரோக்கியத்துடனும் எல்லா செல்வங்களும், நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன்.
பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் துயரங்களை உணர்ந்து ஏழைகளோடு வாழ்ந்து இந்தியாவில் ஈடு இணையற்ற நடிகராகவும், மனிதராகவும் உயர்ந்து விட்ட பின்பும் தன் கடந்த காலத்தை என்றும் நினைவில் கொண்டு வாழ்ந்தும், வாழ்வித்தும் வரும் அண்ணன் ரஜினிகாந்த் கடந்த கால பணிகளை விட எதிர்கால பணிகள் அதிகம் இருக்கும் வண்ணம் அன்னை சக்தி அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?