ஆந்திராவில் பஸ் ஏற நின்ற பெண்ணை கடத்தி கற்பழித்த போலீஸ்காரர் andhra woman kidnapped torture police
Tamil NewsToday, 05:30
ஐதராபாத், செப். 20–
ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மகபூப் நகருக்கு சென்றிருந்தார். அங்கு உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டு ஐதராபாத் திரும்ப அவர் மகபூப் நகர் பஸ் நிலையத்துக்கு வந்தார்.
ஐதராபாத் பஸ்கள் அனைத்தும் சென்று விட்டதால் அந்த பெண் மகபூப் நகர் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார். நள்ளிரவு 1 மணிக்கு அங்கு ரோந்து பணிக்கு வந்த போலீஸ்காரர் சீனு (வயது26). அந்த பெண்ணிடம் விசாரித்தார்.
அவர் தனிமையில் இருப்பதை கண்ட போலீஸ்காரர் அவரை மிரட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள மறைவிடத்துக்கு அழைத்து சென்றார். அவருடன் மேலும் 2 பேர் வந்து சேர்ந்து கொண்டனர். அவர்கள் 3 பேரும் அந்த பெண்ணை கற்பழித்தனர்.
சுமார் 2 மணி நேரம் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அவர்கள் பிறகு பஸ் நிலையத்தில் விட்டு சென்றனர். உடனடியாக அந்த பெண் மகபூப் நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார்.
உதவி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசராவ் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு போலீஸ்காரர் சீனு உள்பட 3 பேரையும் கைது செய்தார். அந்த பெண்ணை போலீஸ்காரர் சீனு மிரட்டி அழைத்து சென்ற போது ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார். ஆனால் அவர் அதை தடுக்க தவறிவிட்டார். இதற்காக அவரும் கைது செய்யப்பட்டார்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?