சித்தார்த்துடன் ஜோடியாக சோப்பு விற்க வரும் சமந்தா
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
அவ்வளவு எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர் இல்லை. சமந்தா. ஆனால் லக்ஸ் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமானதை அவர் தெரிவித்த விதத்தில் நூறு சூரியன் டாலடித்தது. முக்கியமாக, உடன் பணிபுரிகிறவர்கள் யார் என்பது சர்ப்ரைஸ் என்றும் தெரிவித்திருந்தார்.அந்த உடன் பணிகிறவர்களில் ஒருவர் சித்தார்த்.
சித்தார்த்தும், சமந்தாவும் காதலிக்கிறார்கள் என்பது ஊருக்கே தெரியும். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவருக்கும் மட்டும் அது தெரியவில்லை. காளஹஸ்தி கோயிலில் இருவரின் குடும்பமும் ஒன்றாக பூஜை நடத்தி தோஷம் கழித்த பிறகும் ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் என்றுதான் சொல்லி வருகிறார்கள் இருவரும். சமீபத்தில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் ஆந்திராவில் வதந்தி கிளம்பியது.
லக்ஸ் விளம்பரத்தில் சமந்தாவுடன் சித்தார்த்தும் நடிக்கிறாராம். இருவரும் ஜோடியாகதான் சோப்பு விற்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். சமந்தாவின் எக்ஸ்ட்ரா மகிழ்ச்சிக்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?