Parades mark
Indian Independence Day in America
அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள்
இந்திய சுதந்திரதின
விழா கொண்டாட்டத்தை வார விடுமுறையில்
சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
அணி வகுப்பு ஊர்வலங்களும், வண்ணமயமான
மிதவை வண்டிகளும், இந்திய
உணவு வகைகளுடன் கூடிய விருந்தும்
இந்திய நாட்டின் பாரம்பரியத்தையும்,
கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வண்ணம்
கொண்டாடப்படுகின்றது.
நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில்
கடந்த 32 வருடங்களாக நடைபெறும்
சுதந்திரதின அணிவகுப்பு இந்த வருடமும்
வரும் ஞாயிறன்று நடைபெற உள்ளது.
இது அங்கு நடைபெறும் நீண்ட அணிவகுப்பாக
அமையும். இதுதவிர, நியுயார்க்கின் புறநகர்ப்
பகுதியான லாங் ஐலண்டில்
ஒரு அணிவகுப்பும், நியுஜெர்சியில்
ஒரு ஊர்வலமும் நடத்தப்படும்.
ஹிக்ச்விலே நாஸு கவுண்டியில் உள்ள
லிட்டில் இந்தியா எனப்படும் புதிய
குடியிருப்பில் சென்ற ஞாயிறன்று இந்தக்
கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ஏர்
இந்தியா உட்பட வண்ணமயமான அலங்கார
வண்டிகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றன.
இதில் அந்தப் பகுதியின்
நிர்வாகி எட்மாங்கனோ, ஹிந்தி திரைப்பட
நட்சத்திரம் ஆர்த்தி சப்ரியா, 2005 ஆம்
ஆண்டின் யுஎஸ்ஏ அழகியான
செல்சியா கூலி போன்றோர்
கலந்து கொண்டனர். தேசபக்தி கொண்ட
இந்திய நாட்டவராக இதில் கலந்துகொள்வதில்
பெருமை அடைவதாக சப்ரியா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?