பாகிஸ்தானுடன் நட்பையும் கூட்டுறவையும்
உறுதிபடுத்த இந்தியா விரும்புகிறது:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி Pranab Mukerjee
wishes friendly ties with Pakistan
பாகிஸ்தானின் 67வது சுதந்திர தினம்
நாளை (14ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி இந்திய ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப்
அலி சர்தாரிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:-
பாகிஸ்தானின் சுதந்திர தின
விழாவையொட்டி பாகிஸ்தான் அரசுக்கும்,
மக்களுக்கும் எங்களின்
நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில்
மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த இனிய தருணத்தில் பாகிஸ்தான் மூலம்
நட்புறவையும் கூட்டுறவையும்
பலப்படுத்தி நமது பிராந்தியத்தில்
அமைதியையும், நமது மக்களின் வாழ்வில்
முன்னேற்றத்தையும் வளத்தையும் ஏற்படுத்த
விரும்பும் இந்தியாவின்
அர்ப்பணிப்பை மீண்டும் தெளிவுபடுத்த
விரும்புகிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?