Tuesday, 13 August 2013

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற நரேந்திர மோடிக்கு அழைப்பு Narendra Modi gets invite to visit Britain

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற
நரேந்திர மோடிக்கு அழைப்பு Narendra Modi
gets invite to visit Britain

பா.ஜனதா கட்சியின் தேர்தல்
பிரச்சாரக்குழு தலைவரும் குஜராத்
முதல்வருமான நரேந்திர மோடி,
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற
அழைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து எதிர்க்கட்சியின் இந்திய
தொழிலாளர் நண்பர்கள் குழு தலைவர்
பேரி கார்டினர் எம்.பி. கடந்த வாரம் ஒரு கடிதம்
அனுப்பியிருந்தார். அதில், நவீன இந்தியாவின்
எதிர்காலம் என்ற தலைப்பில்
பாராளுமன்றத்தில் உரையாற்ற
வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.
இதேபோல் கன்சர்வேட்டிவ் கட்சியின் இந்திய
நண்பர்கள் குழு தலைவர் சைலேஷ்
வாரா எம்.பி.யும் தனியாக ஒரு கடிதம்
அனுப்பியுள்ளார்.
2002-ல் நடந்த குஜராத்
கலவரங்களுக்கு பிறகு அமெரிக்காவைப்
போன்று இங்கிலாந்து அரசும்
மோடியை புறக்கணித்து வந்த நிலையில்,
இப்போது இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள்
ஒன்றுபட்டு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger