Tuesday, 24 April 2012

இறந்த பின் மனைவியை புதைப்பதற்காக குட்டி தீவை விலைக்கு வாங்கிய பள்ளி ஆசிரியர்



இறந்த பிறகு தனது உடலையும் மனைவியின் உடலையும் புதைப்பதற்காக இங்கிலாந்தில் குட்டி தீவை விலைக்கு வாங்கி உள்ளார் பள்ளி ஆசிரியர் கசிமிர் ரோசின்ஸ்கி இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட் ஷயர் கவுன்டியில் உள� �ளது செயின்ட் ஆல்பன்ஸ் நகரம். இங்கு மெக்கன்சி என்ற பெயரில் குட்டி தீவு உள்ளது.
இங்கு தண்ணீர் சாலைகள் மின்சார வசதி எதுவும் இல்லை. இந்த குட்டி தீவு 18 மாதத்துக்கு முன்பு விலைக்கு வந்தது. ஆனால் யாரும் வாங்கவில்லை. இந்நிலையில் செயின்ட் ஆல்பன்ஸ் நகரில் உள்ள பீச்வுட் பார்க் பள்ளி ஆசிரியர் கசிமிர்  ரோசின்ஸ்கி குட்டி தீவை 46 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.

கசிமிருக்கு தற்போது 50 வயதாகிறது. மனைவி பவுலின் மகன் மைல்ஸ்(12) மகள் லிடியாவுடன்(11) வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து கசிமிர் கூறியதாவது: மூன்று ஆண்டுக்கு முன்பு குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். அது என்னை மிகவும் பாதித்தது. இறந்த பின் எனது உடலை அமைதியான இடத்தில் புதைக்க வேண்டும் என்று விரும்பினேன்.

அதற்காக இந்த தீவை வாங்கி உள்ளேன். தீவுக்கு செல்வது அவ்வளவு எளிதல்ல என்பது தெரியும். எனினும் உலகின் அழகிய இடங்களில் மெக்கன்சி தீவும் ஒன்று.

நானும் எனது மனைவியும் இறந்த பின் இருவரின் உடலையும் இந்த தீவில் தான் புதைக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கூறியுள்ளேன். அதை அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார� ��.


http://tamil-sexygirls.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger