Tuesday, 24 April 2012

ஒருதொகை சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் மூவர் கைது!:-இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!



Tuesday, April, 24, 2012
இலங்கை::சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஒருதொகை சிகரெட்களைக் கொண்டு வந்த மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து இன்று அதி காலை 5.20 அளவில் நாட்டை வந்தடைந்த இந்த நபர்களின் பயணப் பொதிகளுக்குள் இந்த சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவு குறிப்பிடுகின்றது.

சுமார் 830 சிகரெட் காட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவிக்கின்றது.

கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த ம� ��ன்று சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்புத் துறைமுகப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாகனப் போக்குவரத்து மீறல் தொடர்பாக சட்ட � �டவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவே சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் 1,500 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

வட்டரக்க பிரதேச வாகன சாரதி ஒருவரிடமே இந்தப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சந்தேகநபர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதுடன் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கஞ்சாவுடன் மன்னார் பேசாளை பகுதி இளைஞர் கைது!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் மன்னார் பேசாளை பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் இன்று 24ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி� ��ினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 9 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா மற்றும் 890 கிராம் வெள்ளை நிற குடு போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


http://tamilsexstorys2u.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger