


இலங்கை::தம்புள்ளைப் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து , கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது?.
திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நகர அபிவிருத்தி அதிக� ��ரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது மக்களின் சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 60வருடங்களுக்கு முற்பட்ட பழைமைவாய்ந்தது. இந்த ஆலயம் கடந்த காலங்களில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்ப ோது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி அபிவிருத்தியைக் காரணம் காட்டி பிள்ளையார் மீது கைவைக்க முயற்சி எடுக்கப்படுகிறது.
இலங்கை அரசு நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான செயல்களும் நாட்டில் அரங்கேற்றப்படுகின்றன.
இதனால், மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.விசனம் தெரிவித்து ள்ளனர்.
(உறுதி செய்யபடாத செய்தி) 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தை அகற்ற உத்தரவு??
http://tamilsexstorys2u.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?