Friday, 17 February 2012

திவ்யாவின் திடீர் பாசம்!

 
 
இளம் நடிகர் மீது திவ்யா பாச மழை பொழிந்து டுவிட்டரில் புகழ்ந்திருப்பதால் இருவர் பற்றியும் கிசுகிசு கிளம்பி உள்ளது. 'வாரணம் ஆயிரம்', 'குத்து', 'பொல்லாதவன்' உள்பட பல்வேறு தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருப்பவர் திவ்யா. இவர் வெளிநாட்டு தொழில் அதிபர் ரபேல் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஒரு சில நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டனர். இந்நிலையில் 'லக்கி' என்ற படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்துள்ள கன்னட இளம் நடிகர் யாஷ் என்பவரை டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதில், "யாஷ் தொழில் ரீதியான நடிகர். சாந்தமானவர்.
எளிமையானவர். எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர். அவரைப்போல் அர்ப்பணிப்பு நிறைந்த ஒரு நடிகரை இதுவரை பார்க்கவில்லை. சில சமயம் உணவைக்கூட பொருட்படுத்தாமல் நடிப்பில் கவனமாக இருப்பார். கண்ணாடியில் பார்த்து தனக்கு தானே ஒத்திகை பார்த்துக்கொள்வார். நாங்கள் பேச வேண்டிய வசனங்களை மறக்காமல் ஞாபகம் வைத்திருப்பார். மற்றவர்களின் தொடர்ச்சி வசனங்கள் பற்றியும் அவருக்கு ஞாபகம் இருக்கும். சுயநலமற்ற நடிகர். அவரைப் பற்றி வரும் வதந்திகள் ஆதாரமற்றவை. யாஷ் நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்களுக்கு என்னுடைய பெரிய அரவணைப்பு" என்று குறிப்பிட்டு முடித்திருக்கிறார் திவ்யா. இதற்கு பதில் அளித்துள்ள யாஷ், 'திவ்யா திரையுலகில் அனுபவம் உள்ளவர். 2 மணி நேரம் செல் போனில் பேசிக்கொண்டிருந்தாலும் காட்சியை சொன்ன நிமிடத்தில் சரியாக நடித்து முடிக்கும் திறமை உள்ளவர்" என்று தன்பங்குக்கு ஐஸ் வைத்திருக்கிறார். இருவரும் ஒருவருக் கொருவர் ஜலதோஷம் பிடிக்கும் அளவுக்கு புகழ்ந்திருப்பதால் அவர்களை இணைத்து கிசுகிசு கிளம்பி இருக்கிறது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger