
ஆனால் கனடாவில் பிறந்து வளர்ந்திருக்கக் கூடிய பிஞ்சுப் பாலகி தனது ஊரையும், தன் வீட்டையும் நினைத்து தமிழ் மக்களுக்கு நடந்த சோகத்தை உலகெங்கும் எடுத்துக் கூறியுள்ளார் தனது பாடல் மூலம்.
விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற யூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈழத்துத் தமிழ்ச் சிறுமியின் பாடல் வரிகளைக் கேட்கும் போது, கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கின்றது.
புலத்தில் வாழ்ந்தாலும் ஊரின் நினைவலைகளுடன் வாழும் எத்தனையோ ஈழத் தமிழர்களுக்கு இப் பாடல் வரிகள் கண்ணீரைப் பரிசளித்திருக்கும்.
அதிலும் இப் பாலகி தனது நாடு, ஊர், வீடு என்பதைக் கண்டிருக்க அவரின் வயது இடமளித்திருக்காது. இருந்தும் பெற்றோர்களின் தேசப்பற்றுதான் இச் சிறுமியின் மனத்திலும் ஆழப் பதிந்திருந்தாலும் அந்த உணர்வு யாரும் சொல்லிக் கொடுத்து வந்து விடுவதில்லை.
எமது இனத்தின் போராட்ட சுவடுகளை அழித்து விட நினைக்கும் சிறீலங்கா அரசின் நடவடிக்கை ஒருபோதும் பலித்து விடாது என்ற நம்பிக்கையை இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது ஏனெனில் விடுதலை வேட்கையும் சுதந்திர தாகமும் சிங்கள வெறியர்கள் சூறையாடிவரும் எமது தேசத்தின் வளங்களிலும் எமது பாரம்பரியத்திலும் மட்டுமல்லது ஒவ்வரு தமிழன் மனதிலும் ஆழப்பதிந்துள்ளது.
எனவே இப் பற்றாளர்கள் இருக்கும் வரை நிச்சயம் நாம் நிம்மதி பெறுவோம். அதனைத்தான் இந் நிகழ்ச்சியின் நடுவர்களும் எடுத்துக் கூறியுள்ளனர். இப்படிப்பட்ட நிகழ்வினை வேறு தொலைக்காட்சி நிறுவனங்களாக இருந்திருந்தால் கண்டிப்பக அனுமதித்து இருக்கமாட்டர்கள் அந்தவகையில் ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கும் இடமளித்த விஜய் டிவி க்கும் நிகழ்ச்சி அனுசரனையாலர்களுக்கும் ஈழத்தமிழர் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?