அரசியல் பரபரப்பிலும் தன் இரண்டாவது மகனை ஹீரோவாக்க பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் விஜயகாந்த். அதற்கான கதையை முடிவு செய்வதில் தீவிர டிஸ்கஷன் நடந்து வருகிறதாம். ஆர்.கே.செல்வமணி உட்பட இதுவரை இருபதுக்கும் மேற்பட்டவர்களிடம் கதை கேட்டிருக்கிறாராம் கேப்டன்.
தன் வாரிசு அறிமுகமாகும் முதல் படமே அமோக வெற்றிபெற வேண்டும் என்பது கேப்டனின் ஆசையாம். நல்ல கதைக்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்பது தான் பையனுக்கு கேப்டன் தரும் அட்வைஸாம்.
இப்படி தான் கதை கேட்டு வரும் காலகட்டத்தில், சண்முக பாண்டியனை சும்மா இருக்க விடாமல் தினமும் நீச்சல், குதிரை ஏற்றம் மற்றும் பலவிதமான சண்டைப் பயிற்சிகளை தனக்கு மிகவும் நெருக்கமான மாஸ்டர்களை வைத்து கற்றுத்தர வைக்கிறாராம்.
கதை சொல்ல தேடி வருகிற டைரக்டர்கள் மட்டுமின்றி, சில முன்னணி டைரக்டர்களிடம், சற்றும் ஈகோ பார்க்காமல் என் பையனுக்கு ஒரு நல்ல கதை இருந்தா, படம் பண்ணி ஒரு அறிமுகத்தைக் குடுங்க சார் என்று கோரிக்கையும் வைக்கிறாராம் கேப்டன்.
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு தளபதி தயாராகி வருகிறார் போலிருக்கே!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?