ஆரோக்கிய டாக்டருக்கே அல்சர் வந்த மாதிரி ஆகிருச்சு தனுஷோட நிலைமை. கொலவெறி பாடல் உச்சத்திலிருந்தாலும், அவரோட மார்க்கெட் மட்டும் நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது. அவருக்கு இருக்கிற பிசினசுக்குள் படம் எடுத்தாலும் அதுவும் ஓடாம போகுதேன்னு கவலைப்பட்டு கண்ணீர் சிந்துது தயாரிப்பாளர் வட்டாரம். இந்த நேரத்தில்தான் இன்னொரு அழுகாச்சி. சிம்பு தேவன் இயக்கவிருக்கும் மாரீசன் படத்தில் தனுஷ்தான் ஹீரோ. அவரு தயாரிக்கிறார், இவரு தயாரிக்கிறார்னு பேச்சு அடிபட்டு, கடைசியில் இந்த பேச்சுக்கே பிளாஸ்திரி போடுகிற அளவுக்கு போயிருக்கு நிலைமை.
சிம்புதேவன் பட்ஜெட்டுக்கும் தனுஷ் மார்க்கெட்டும் குறைந்த பட்சம் பத்து கோடி வித்தியாசம் வருதாம். கதை பிடித்திருப்பதால் தனுஷே தயாரிப்பாளர் தேடி அலைகிறார் என்கிறது கோடம்பாக்கத்து குருவி.
இதற்கிடையில் சச்சினுக்காக தனுஷ் மெனக்கட்டிருக்கும் கொலவெறி பாடலுக்கும் சச்சின் ரசிகர்கள் வட்டாரத்திலிருந்து அம்புகள் பாய ஆரம்பித்திருக்கிறது.
மூன்றெழுத்து தனுஷுக்கு முன்னூறு இடத்திலிருந்து பிரஷர் வந்தாலும், அண்ணன் எப்பவுமே ஸ்ட்ராங்குதான்!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?