பாலிவுட் நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பாலிவுட்டில் நெடுங்காலமாக காதலர்களாக வலம் வந்த நடிகை கரீனா கபூரும், நடிகர் சைப் அலி கானும் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர். இந்நிலையில் கரீனா கர்ப்பமாக இருப்பதால் தான் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.கடந்த வாரம் மும்பை விமான நிலையத்தில் கரீனா லூஸான பச்சை நிற டிசர்ட் அணிந்து லேசாக வீங்கியது போல் இருந்த வயிற்றை துப்பட்டாவால் மறைத்தபடி சென்றார். அதை ஒரு புகைப்படக்காரர் கிளிக் செய்து இணையதளத்தில் வெளியிட்டார். கரீனா கர்ப்பம் என்பதை அவரது தரப்பினர் மறுத்தனர்.
இந்நிலையில் இம்ரான் கானுடன் நடித்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வந்த கரீனா பயங்கர லூஸான டாப் அணிந்து வந்துள்ளார். பாலிவுட்டில் சைஸ் ஜீரோவில் உள்ள கரீனா கபூர் எதற்காக லூஸான உடை அணிய வேண்டும். வயிறு எதற்காக வீங்கியது போல் இருக்கிறது என்பது தான் பாலிவுட்டின் ஹாட் டாபிக்.
சைப்ரீனாவின் நிச்சயதார்த்தம் வரும் 10ம் தேதியும், வரும் மார்ச் மாதம் 23ம் தேதி திருமணமும் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்யாணமான பின்னர் கர்ப்பமாவது எல்லாம் இப்போது பழையை ஸ்டைலாகி விட்டது. பல பிரபலங்கள் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்து விடுகிறார்கள். சிலர் குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் கல்யாணத்தை வைத்துக் கொள்கிறார்கள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?