Thursday, 16 February 2012

பணம் கடத்தி மாட்டிய

 
குடியரசுத் தலைவர் மகன்!
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்து வரும் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
13ம் தேதி காலை அமராவதி அருகே, போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், நாக்பூரில் இருந்து வந்த காரின் முன்பகுதியில் ஒரு கோடி ரூபாய் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கார் டிரைவர் பிரகாஷ் மஸ்ரம் மற்றும் ஆசிஸ் போதங்கர் ஆகியோரை விசாரித்ததில் தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுக்க கொண்டுவர்ப்பட்டது தெரிந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் விசாரித்ததில், அப்பணம் குடியரசுத்தலவர் பிரதிபா பாட்டீலின் மகனும், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,வுமான, ராவ்சாகிப் செகாவத்திற்காக கொண்டு வரப்பட்டது என தெரிந்தது.
ராவ் சாகிப் செகாவத்
 
இதுபற்றி குடியரசுத்தலவரின் அருமை மகனும்,சட்டமன்ற உறுப்பினருமான ஷெகாவத் "உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஏழை மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு பணம் தேவைப்படுகிறது. இவ்வாறு 87 பேருக்கு உதவுவதற்காக, மாநில காங்கிரசிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டிருந்தேன்.அதைத்தான் நாக்பூரில் இருந்து கொண்டு வந்தோம். இதை ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் என பிரித்துக் கொடுக்க நினைத்திருந்தோம். மீதமுள்ள பணத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்திருந்தோம். ஆனால், அதற்குள் பணம் போலீசாரிடம் சிக்கியது. இது குறித்து போலீஸ் கமிஷனருக்கு கடிதம் அளித்துள்ளேன். போலீசார் கோர்ட்டில் அத்தொகையை தாக்கல் செய்துள்ளனர். அதை பெற நாளை (இன்று) கோர்ட்டில் முறைப்படி விண்ணப்பித்து பெறுவோம். அப்பணம் கிடைத்தால், வேட்பாளர்களுக்கு உதவியாக இருக்கும்' என்றார்.
 
ஏழை வேட்பாளர்களுக்கு கட்சியில் இருந்து கொடுக்கும்பணத்தை முறைப்படி சட்டப்படியே கொடுக்கலாமே.இப்படி மறைத்து கொண்டு வர வேண்டிய கட்டாயம் என்ன வந்தது.
முறைகேடாக வாக்காளர்களுக்கு செலவிடதான் இப்பணத்தை இந்திய முதல் குடிமகளின் மகன் கடத்தியுள்ளார்.
இந்தியாவின் தலைவர்கள்,அமைச்சர்கள் நடந்து கொள்ளும் முறை குடிமக்களை தலை குனிய வைக்கிறது.
ஒரு நாட்டின் குடியரசு தலைவரின் மகனே தேர்தல் விதி முறைகளை -சட்டத்தை மதிக்க வில்லை எனில் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் விதிமுறையை மீறி முறை கேடு செய்ததுமில்லாமல் அதை எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நியாயப்படுத்துகிறார்.பிரதமர்,நிதியமைச்சர் போன்றவர்கள் இந்தியாவின் மாபெரும் ஊழல்களை நியாயப்பபடுத்துவதற்கு எந்த வகையிலும் இது குறைவானதல்ல.

இதுவரை அந்த பெரிய பொறுப்பில் இருந்த எந்த தலைவரின் குடும்பத்தினரும் இப்படி சட்ட,விதிகள் மீறலில் ஈடுபட்டதாக தெரியவில்லை.பிரதிபா பாட்டில் மகன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இது குடியரசுத்தலைவரின் நாற்காலிக்கு ஒரு கறைதான்.பிரதிபா பாட்டில் என்ன சொல்ல-செய்யப்போகிறார்.
_____________________________________________________________________________________________

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிஇடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. மார்ச் மாதம் 18ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும் .



  • மனுத்தாக்கல் நாள்: பிப்.22
  • மனுத்தாக்கல் கடைசி நாள்: பிப்.29
  • வேட்பு மனுக்கள் பரிசீலனை : மார்ச் 1
  • வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவது: மார்ச் 3
  • வாக்குப் பதிவு : மார்ச் 18
  • வாக்கு எண்ணிக்கை : மார்ச் 21


_____________________________________________________________________________________________________
செய்திதாள்களுக்கான இணைய தளம்.


காலையில் பலருக்கு அன்றைய செய்தித் தாள்களைப் படிக்கவில்லை என்றால், எதனையோ பறி கொடுத்தது போல் இருக்கும். இப்போது ஏறத்தாழ அனைத்து பத்திரிக்கைகளும், தங்கள் செய்தித்தாளினை, தாங்கள் உருவாக்கிய இணைய தளங்களில் அமைத்து படிக்கத் தருகின்ற னர். சில செய்தித்தாள் நிறுவனங்கள் இதற்குக் கட்டணம் வசூலிக்கின்றன. பல வசூலிப்பதில்லை. இவற்றைப் படிக்க, இந்த செய்தித்தாள் இணைய தளங்களின் முகவரியினைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றை நம்முடைய பேவரிட் தளப் பட்டியலில் போட்டு வைத்து இன்டர்நெட் இணைப்பில் கிளிக் செய்து படிக்கலாம். இதற்குப் பதிலாக, ஓர் இணைய தளம் சென்றால், அனைத்து இந்திய பத்திரிக்கைகளின் தளங்கள் அல்லது அவற்றிற்கான லிங்க்ஸ் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படி நமக்குவசதிதரும்இணையதளம்தான்http://www.eazyhomepage.com/Indian_newspapers.html .

இந்த தளம் சென்றால்,பல இந்தியமொழிகளில், கிட்டத்தட்ட135 பத்திரிகை களின் இணையப் பதிப்பிற்கான தொடர்பு ஐகான்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் கிளிக் செய்தால், நாம் விரும்பிய செய்தித்தாளை படிக்கலாம்.
________________________________________________________________________
தேசிய அவமானம்.

படத்தில் காணப்படும் இந்த இரண்டு வயது குழந்தை பெயர் ரஜினி.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தது.ஊட்டச்சது குரைவால் பாதிக்கப்பட்டுள்ளது.
மிகவும் எடை குறைவு.எடையை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்தியா வல்லரசாகிக்கொண்டிருக்கிறது.ஆனால் அதில் வாழும் மக்களுக்கு நல்லரசாக இல்லையே?
உணவு இல்லாமல் பசியில் இந்தியாவில் நாளொன்றுக்கு 3000 குழந்தைகள் மடிகின்றதாம்.

இது அதே மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விகாசா[4 மாதம்]
இது இந்திய தேசிய அவமானம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருத்தப்பட்டாராம்.
இதை சரி செய்யும் மந்திர கோல் அவர் கையில் இல்லையே நாம் என்ன செய்வது.
அதிகாரங்களை தன்னிடம் வைத்துக்கொண்டு பார்வையாளர்போல் ஒரு நாட்டின் பிரதமர் வருத்தபடுவது[அல்லது நடிப்ப்பது]தான் தேசிய அவமானம்.
________________________________________________________________________

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger