Thursday 16 February 2012

உங்கள் பாதங்களை அழகாக பராமரிக்க இதோ எளிய முறைகள்

 

பாதங்களை பாதிப்பவை பித்த வெடிப்புகளும், விரல் இடுக்குகளில் ஏற்படும் புண்களும்தான். அழகான முகம் கொண்டவர்கள் கூட பாதங்களில் உள்ள பித்தவெடிப்புகள், புண்களினால் பாதிப்பிற்குள்ளாகின்றனர். முகத்தை பராமரிப்பதைப் போல பாதங்களையும் வாரம் ஒருமுறை கவனித்தால் பஞ்சுபோன்ற பாதங்களைப் பெறலாம். அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.மருதாணி இலைகள்

முற்காலங்களில் வீட்டின் கொல்லைப்புறத்தில் மருதாணி மரம் வைத்திருப்பார்கள் வாரம் ஒருமுறை அவற்றை பறித்து மைய அரைத்து கை, கால்களில் அழகு படுத்துவார்கள். அதனால் பாதங்கள் நோய் தாக்குவதில் இருந்து பாதுகாக்கப்பட்டது. இப்பொழுது மருதாணி அரைப்பதற்கெல்லாம் பொறுமை இல்லை. அதனால் ரெடிமேட் மெகந்தி வைத்து அழகு படுத்துகின்றனர். பாதங்களை பாதுகாக்க மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப வேண்டும் என்று அழகியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

மஞ்சள், வேம்பு

இந்தியாவின் மருத்துவ மூலிகைகளான மஞ்சளும், வேம்பும் பாதங்களை பாதுகாப்பதில் மிக முக்கியமானவை. வேப்பிலையை பறித்து மஞ்சள் அதனுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்கவேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

வேப்ப எண்ணெய்

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

சுடுநீர், எலுமிச்சை

பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் இறந்துபோன செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாக பட்டுப்போல மாறும்.

இரவு நேரத்தில் உறங்கப் போகும் முன் நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

தரமான காலணிகள்

தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்தினாலும் சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானதை பார்த்து கவனித்து வாங்குவது நல்லது.

குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger