கன்னட படத்தில் நிர்வாணமாக நடித்தது பற்றி பூஜா காந்தி பரபரப்பான பதில் அளித்தார். கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. கன்னடத்தில் 'தண்டுபால்யா' என்ற படத்தில் நடிக்கிறார். ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்குகிறார். இதில் கொள்ளை கும்பல் தலைவியாக நடிக்கும் பூஜா, போலீசில் பிடிபட்டதும் அவரை நிர்வாணமாக்கி விசாரிக்கிறார்கள். இந்த காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இக்காட்சியில் நடித்தது பற்றி பூஜா காந்தி கூறியதாவது:
தலை முதல் கால் வரை ஒட்டுத்துணிகூட இல்லாமல் இருப்பதுதான் டிக்ஷ்னரிப்படி நிர்வாணம். நான் அப்படி நடிக்கவில்லை. சேலை போர்த்தி இருப்பேன். அதை போலீசார் வலுக்கட்டாயமாக நீக்க முயல்வார்கள். நான் போராடுவேன். இந்த சீனில் பின்புறம் முழுவதும் தெரியும்படி நடித்தேன். லட்சுமி என்ற மாஃபியா கும்பல் தலைவியிடம் போலீசார் நடத்திய நிஜ விசாரணை காட்சிகளின் வீடியோவை இயக்குனர் எனக்கு போட்டுக்காட்டினார். லட்சுமியின் கூட்டாளிகளையும் நிர்வாணமாக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என்றார். லட்சுமி கதாபாத்திரத்தைதான் பூஜா ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?