புது டில்லி ரயில் நிலையத்தில் வைத்து மல்வா அதிவேக ரயிலில் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரின் பயணப் பை இனந்தெரியாத நபர்களால் களவாடப்பட்டுள்ளது.கடந்த 13ம் திகதி களவாடப்பட்ட இந்தப் பயணப் பையில் இலங்கை இராணுவ அதிகாரியின் பணம், சடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணப் பையைத் தொலைத்த இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் டி.கே.களுதேவ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முகாம் ஒன்றில் பங்குபற்ற டெல்லியில் இருந்து இந்தூர் சென்ற இவர், தனது பயணப் பையில் கடவுச்சீட்டு, கடனட்டை, 4 ஆயிரம் ரூபா இந்திய பணம், 5 ஆயிரம் ரூபா இலங்கை பணம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.
பயணப் பை காணாமல் போன ரயிலின், குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு ஆசனத்தில் குறித்த இராணுவ அதிகாரி பயணம் செய்துள்ளார்.
இந்தூர் ரயில் நிலைய பொலிஸாரிடம் இவர் நேற்று (15) முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு டெல்லிக்கு விசாரணைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?