மாநிலம் முழுவதும் இருக்கிற பெண் கபடி வீராங்கனைகளை ஒன்று திரட்டி ஒரு மிகப்பெரிய கபடி போட்டி ஒன்றை நடத்தி வருகிறது ஈரோட்டை சேர்ந்த பைரவா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம்.
முதல் பதினாறு மாவட்டங்களை சேர்ந்த வீராங்கனைகள் ஈரோடு நகரத்தில் திரண்டு மேட்ச் ஆடினார்கள். இவர்களை ஊக்குவிக்க வந்திருந்தார் நடிகை அஞ்சலி. 'அக்கா, நாங்க உங்க கலருக்கு வரணும்னா என்ன செய்யணும்?' என்றெல்லாம் அஞ்சலியிடம் கேள்வி கேட்டு அதிர வைத்தார்கள் வீராங்கனைகள்.
நானும் உங்களை மாதிரி சாதாரண பொண்ணுதான். வெயில்ல நிற்காம ஏசியிலேயே இருக்கறதால் சிவப்பா இருக்கேன். உங்களை மாதிரி வெயிலில் நின்றால் கருப்பாகிவிடுவேன் என்று பதிலளித்த அஞ்சலி, அந்த போட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண்ணுக்கு அன்றைய தினம் பிறந்த நாள் என்று கேள்விப்பட்டவுடன் உடனே கேக் வரவழைத்து அங்கேயே அந்த கிராமத்து பெண்ணை குதூகலப்படுத்தினார்.
வர்றீங்களாக்கா ஒரு ஆட்டத்துக்கு என்று அவர்கள் அழைக்க, ஐயோ பொண்ணுங்களா ஆளை விடுங்க என்று ஓட்டமும் பிடித்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?