குவைத் தமிழர் கூட்டமைப்பின்சார்பில் தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள் தோழர். செங்கொடி நினைவரங்கத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை நல்கி கவிஞர். விருதைபாரி அவர்கள் ஈகைச்சுடர்ஏற்றிவைத்திட தோழர்.தமிழ்நாடனை அழைத்தார்.
தோழர்.தமிழ்நாடன்அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி தொடக்கவுரை நிகழ்த்தினார். தொடர்ந்து முனு.சிவசங்கரன் அவர்கள்மாவீரர்நாள் உறுதிமொழி செய்துவைத்தார்கள்.
தொடர்ந்து, தமிழ்த்தேசியவிடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர். தியாகு அவர்களின் மாவீரர்நாள் அறிக்கையினைதொழிலதிபர் சாமி வெளியிட பொறியாளர் இராமன் அவர்கள் பெற்றுக்கொண்டர்கள்.தோழர். சிவமணி,தோழர்.பகலவன் ஆகியோரின் எழுச்சிமிகு மாவீரர்நாள் கவிதையினைத் தொடந்து, தோழர்.முனு.சிவசங்கரன்அவர்களும் தோழர்.பின்னலூர் மணிகண்டன் அவர்களும் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து உரையாற்றியபொறியாளர் முத்து அவர்கள், இலங்கை விமானத்தில் பயணிப்பதை புறக்கணிக்கவும், எதிரிகளின்பொருட்கள் தயாரிப்புக்களை புறக்கணிக்கவும் கோரிக்கையினை முன்வைத்து எழுச்சியான உரைநிகழ்த்தினார்கள். இதைத்தொடர்ந்து, தமிழகத்திலிருந்து இணையம் வழி தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.தியாகுஅவர்கள் மாவீரர்நாள் உரை நிகழ்த்தினார்கள்.
அடுத்து பொறியாளர்இராமன் அவர்கள் தமிழர்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து உரையாற்றினார்கள்.தொடர்ந்து, நாடுகடந்ததமிழீழ அரசின் துணைப்பிரதமர் திரு. உருத்திராபதி சேகர் அவர்கள் இணையம் வழி மாவீரர் நாள் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து தோழர்கள் இர குநாதன், தோழர். பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் எழுச்சிமிக்க கவிதையோடும் தோழர் செந்தில்குமார்,தோழர்.மாதவன், கவிஞர் தோழர் வித்யாசாகர் அவர்கள் உணர்வுமிக்க கவிதையோடும் பொறியாளர்சேகர் அவர்களும் உரையாற்றினர்.
அடுத்து, தினமலரைப்புறக்கணிப்போம் என்றக் கோரிக்கையோடு உறுதிமொழி ஏற்றிவைக்க, தோழர் செல்லம்மா வித்யாசாகர்அவர்கள் முதல் ஒப்பம் இட்டு தொடங்கிவைக்க பங்கேற்ற அனைவரும் ஒப்பம் இட்டார்கள்.
இறுதியாக, தோழர்வின்சென்ட் அவர்கள் உரையாற்றினார்கள். காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பில் உருவாக்கப்படும்தோழர்.செங்கொடி நினைவுமண்டப பணிகளுக்கு கொடைஅளிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை தோழர்.தமிழ்நாடன் முன்வைக்க பலரும் முன்வந்து கொடைநல்கினர்.
தனது குடும்பத்தார்படித்துவந்த தினமலர் நாளிகையினை நிறுத்தச்செய்த தோழர் குமரேசன் அவர்களுக்கும் அவரதுகுடும்பத்தாருக்கும் அவையில் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
மிகுந்த எழுச்சியோடும் உணர்வுப்பூர்வமாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழிலதிபர்கள் இராசேந்திரன், செந்தில் ஆகியோரும் தோழர்.செயபாலன், தோழர். பிரான்சிசு சீசர், தோழர். சிவராமகிருட்டிணன், தோழர்.நடராசன், தோழர் கருப்பசாமி, கவிஞர் தமிழ்க்காதலன், ஓவியர் கொண்டல்ராசு உள்ளிட்ட ஏராளமானோர்கலந்துகொண்டனர்.
http://actressmasaala.blogspot.com
http://girls-stills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?