Monday, 17 October 2011

பார்ட்னரின் செக்ஸ் உணர்வைத் தூண்டி உறவுக்கு அழைப்பது எப்படி?

 
 

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ, இனிக்கும் இன்ப நிலவே நீ வா வா என்று நீங்கள் மட்டும் பாடிக் கொண்டிக்க, உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல் 'புக்' எதையாவது படித்துக் கொண்டிருக்கிறாரா...... கவலைப்படாதீர்கள், அப்படி இருப்பதாலேயே மட்டும் அவருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை.
நாமதான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தினால் கூட அப்படி இருக்கக் கூடும். இல்லாவிட்டால் ஏதாவது தயக்கமாகக் கூட இருக்கலாம். எனவே, பார்ட்னரின் மனதில் என்ன உள்ளது என்பதை சின்ன சின்ன சில்மிஷங்கள் மூலம் நாம் அறிந்து உறவுக்குள் புகலாம்.

நீங்கள் பெண்ணாக இருந்தால் இப்படிச் செய்து பாருங்கள்...சொக்க வைக்கும், உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உள்ளாடைகளுக்கு மாறுங்கள். நிச்சயம் உங்கள் ஆள் திசை திரும்புவார்.

பாத்ரூமுக்குள் புகுந்து ஜில்லென்று ஒரு குளியல் போட்டு தலையில் ஈரம் சொட்டச் சொட்ட, ஒரே ஒரு துண்டை மட்டும் உடம்பில் கட்டிக் கொண்டு அப்படியே வாருங்கள். துண்டு நழுவப் போவது 'இப்பவா, அப்பவா' என்ற ரேஞ்சுக்கு இருந்தால் இன்னும் பெட்டர். என்னதான் ஹிட்லர் டைப் ஆளாக இருந்தாலும் கூட இந்தக் கோலத்தைப் பார்க்கும் யாருக்குமே நிச்சயம் 'மூட்' மாறும்.

முடிந்தவரை படுக்கை அறையில் கருப்பு அல்லது சிவப்பு நிற உடையை அணியுங்கள். செக்ஸ் உணர்வைத் தூண்டுவதில் இந்த இரண்டு கலர்களுக்கும் ஏகப்பட்ட பங்கு இருக்கிறது.

உங்களவரை நெருங்கி உட்கார்ந்து, அல்லது படுத்தபடி சற்றே செக்ஸியாக பேசுங்கள், சைகைகளை செய்யுங்கள். பேச்சை விட சைகைகளுக்கு நிறைய 'பவர்' உண்டு. எனவே இது ஒர்க் அவுட் ஆகும்.

நெருங்கி உட்கார்ந்து கைகளால் அவரை தழுவுங்கள், மென்மையாக. சின்னச் சின்ன வருடல்கள், முத்தம், ஒற்றை விரலால் உடல் முழுவதும் நர்த்தனம் செய்யுங்கள். நிச்சயம் 'பார்ட்டி' நெளிய ஆரம்பிப்பார்.

இப்படிச் சின்ன சின்னதாக செய்து உங்களவரை மூடுக்குக் கொண்டு வரலாம்.

இது பெண்களுக்கு. சரி, நீங்கள் ஆணாக இருந்தால், என்ன செய்ய வேண்டும்?

பெண்ணின் உடலிலேயே செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக் கூடிய சில முக்கிய இடங்களில் முதுகும் ஒன்று. அங்கு உங்களது கை விரல்களை சில விநாடிகள் விளையாட விட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும்.

உங்கள் பார்ட்னரின் காது மடல்களுடன் சில நிமிடம் விளையாடுங்கள். நெருங்கிச் சென்று லேசாக முனுமுனுத்தபடி பேசினாலே அவருக்கு நிச்சயம் மூட் கிளம்பி விடும். முத்தமிடுவது, நாவால் வருடுவது போன்றவையும் கூட கூடுதல் பலன் தரும். அதற்காக, காது ஜவ்வு கிழிந்து போகும்படி சத்தமாக மட்டும் பேசி விடாதர்கள்!

பெண்ணின் கழுத்தில் நிறைய விஷயம் இருக்கிறது. கைகளால் அங்கு நீங்கள் நர்த்தனம் ஆடினால், கழுத்தின் பின்பக்கத்தில் லேசாக முத்தமிட்டால், வருடிக் கொடுத்தால், மயங்காத பெண்ணும் மயங்குவார். உடனடி உறவுக்கான 'பாஸ்போர்ட்' இந்த இடத்தில்தான் கிடைப்பதாக செக்ஸாலஜிஸ்ட்டுகள் கூறுகிறார்கள்.

உங்களவரின் கால்களை இதமாக பிடித்து விடுங்கள், பாதங்களில் மசாஜ் செய்யுங்கள், விரல்களை சொடுக்கி எடுங்கள்-வலி்க்காமல். குதிகால், பாதம், முழங்காலின் பின்பகுதி ஆகியவற்றில் உங்கள் விரல்கள் விளையாடும் விதத்தைப் பொறுத்து வேகமான உறவுக்கு உத்தரவாதம் கூடும்.

இதுபோன்ற சின்னச் சின்ன வேலைகள் மூலம் மூடில் இல்லாதவர்களையும் கூட மாற்றி உங்கள் பக்கம் மயங்க வைக்கும்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger