கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினியின் குடும்பத்தினரிடம் பண வசூல் செய்வதற்காக சென்னை வந்த சுசில்குப்தா என்ற பைனான்சியர் போலீசில் சிக்கினார். இவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துவிட்டார்கள் என்ற தகவலை செய்திதாளில் படித்திருக்கலாம். (ஆனால் மறுநாளே ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் அவர்) கொடுத்த கடனை வசூல் பண்ண வந்தவரை இப்படி புடிச்சு உள்ள தள்ளிட்டாங்களே... என்று கூட கோடம்பாக்கத்தில் சிலர் அலுத்துக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் இந்த பைனான்சியரை பற்றி வருகிற தகவல்கள் அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லை.
2010 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ந் தேதி ரஜினியின் மகள் சவுந்தர்யாவின் அலுவலகத்தை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியிருக்கிறது. அங்குள்ள நாற்காலிகளையும் மேஜைகளையும் உடைத்து நொறுக்கிய அந்த கும்பல் ஜாக்கிரதை என்று எச்சரித்துவிட்டு கிளம்பியதாக கூறப்படுகிறது. அப்போது போலீசுக்கு போக வேண்டாம் என்று கூறி விட்டாராம் ரஜினி. இந்த தாக்குதலுக்கு காரணமே பைனான்சியரின் தூண்டுதல்தான் என்கிறார்கள் இப்போது.
வாங்கிய நாலரை கோடியில் இரண்டு கோடி ரூபாயை செலுத்திவிட்ட லதா ரஜினியிடம் தொடர்ந்து மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தாராம் இந்த பைனான்சியர். இந்த நிலையில்தான் இவரை சென்னைக்கு வரவழைத்து போலீசிடம் மாட்டிவிட்டிருக்கிறார்கள்.
யாருமே புகார் கொடுக்காத அந்த ஆபிஸ் தாக்குதல் கலவரம் மீண்டும் உயிர் பெறலாம். தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான இரு நபர்கள் இந்த வழக்கில் சிக்கி மீண்டும் சிறைக்கு செல்லக் கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
பைனான்சியர் பற்றி சொல்லப்படும் இன்னொரு தகவல்தான் பயங்கரமாக இருக்கிறது. கமல் நடித்த ஒரு படத்தை தயாரித்த இரண்டெழுத்து தயாரிப்பாளர் இவரிடம் கடன் வாங்கியிருந்தாராம். அது தொடர்பாக நடந்த பஞ்சாயத்தின் போது, தான் குடித்துக் கொண்டிருந்த டீயை அப்படியே தயாரிப்பாளர் தலையில் சுடசுட கொட்டியவர்தானாம் இவர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?