Monday, 12 September 2011

யேர்மன் வடமாநில ���மிழாலயங்களுக்க���ன மாவீரர் வெற்ற��க்கிண்ண மெய்வல்���ுனர் விளையாட்டுப்போட்டி (படங்கள��� இணைப்பு)



வடமாநிலம் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 10.09.2011 சனிக்கிழமை அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கொடியேற்று வைபவத்தைத் தொடர்ந்து தமிழாலய அணிவகுப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பல தமிழாலயங்களின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றிப் பதக்கங்களும், வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

Osnabrück தமிழாலயம் 788 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், Göttingen தமிழாலயம் 247 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், Bremen தமிழாலயம் 128 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தினர். மாணவர்களோடு பெற்றோர்களும் மிகவும் ஆர்வமாகக் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

விளையாட்டுப்போட்டி ஆரம்பமாகும் முன்னர் வீரமங்கை செங்கொடியின் வணக்க நிகழ்வு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், ஈகைச்சுடரேற்றி செங்கொடிக்கு அகவணக்கம் செலுத்தினார்கள்.







http://smsgalatta.blogspot.com



  • http://smsgalatta.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger