Monday, 12 September 2011

தமிழீழ அரசாங்கத��தின் ஏற்பாட்டில��� ஜேர்மன், சுவிஸ் நாடுகளில் தோழர் ���ெங்கொடிக்கு வணக்க நிகழ்வுகள்



கருணை மனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரது உயிர்காக்க தன்னுயிரை தீக்கு இரையாக்கிய தியாகச்சுடர்.தோழர் செங்கொடிக்கு வணக்க நிகழ்வுகள் ஜேர்மனியின் மூன்று நகரங்களிலும் சுவிசின் சூரிச்சிலும் இடம்பெற்றுள்ளன.

சுவிஸ்:

சூரிச் சிவன் கோவிலில் இடம்பெற்ற வணக்க நிகழ்வில் நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி ஜெயம் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றலுடன் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஜேர்மனி:

பிறீமன், கானோவர், ஸ்ருட்காட் ஆகிய இடங்களில் இடம்பெற்ற வணக்க நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர்.

பிறீமன், கானோவர் ஆகிய நகரங்களில் இடம்பெற்ற வணக்கம் நிகழ்வினை நா.த.அசராங்கத்தின் கல்வி, கலாச்சார, விளையாட்டு, உடல்நலத்துறை துணை அமைச்சர் ராஜரட்ணம் ஜெயசந்திரன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.

நிதித்துறை துணை அமைச்சர் நடராஜா ராஜேந்திரா தலைமையில் ஸ்ருட்காட் வணக்க நிகழ்வு இடம்பெற்றிருந்தன.

இதேவேளை, பிறீமன் நகரில் தோழர்.செங்கொடியின் வணக்க நிகழ்வினைத் தொடர்ந்து நா.த.அரசாங்கத்தின் செயற்பாடுகளை விளக்கும் மக்கள் அரங்கம் நிகழ்வு இடம்பெற்றது.

உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்களும் மக்கள் அரங்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்.

சுதந்திர தமிழீழத்தை நோக்கிய, தமிழின அழிப்பை - சுயநிர்ணய உரிமையை மையப்படுத்திய, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உலகளாவிய வேலை திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதோடு இதற்கான ஜேர்மனியின் செயற்திட்ட அணியும் உருவாக்கப்பட்டது.

நாதம் ஊடகசேவை

http://smsgalatta.blogspot.com



  • http://smsgalatta.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger