கடாபியும் தற்போது ஆட்சியைவிட்டு நைஜர் நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் நேற்று டிரிபோலி வந்த இடைக்கால அரசின் தலைவருக்கு கிளர்ச்சியாளர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். இது குறித்து லிபியா இடைக்கால அரசின் தேசிய கவுன்சில் பிரதமர் முகமது ஜப்ரில் கூறுகையில், தற்போது அதிபர் கடாபியின் ஆட்சி முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது. இன்னும் 10 நாட்களில் லிபியாவில் புதிய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதைத்தொடர்ந்து லிபியாவின் பல்வேறு மண்டலங்களுக்கும் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் என்றார்.
http://smsgalatta.blogspot.com
http://smsgalatta.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?