முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் தூக்கை ரத்து செய்யக்கோரி தீக்குளித்து இறந்த தோழர் செங்கொடியின் இறுதி அஞ்சலியில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கலந்துகொண்டார்.
அஞ்சலியில் அற்புதம்மா, ''தோழர் செங்கொடியின் மரணம், நாம் காலம் பூரா எண்ணி, வருந்தக்கூடிய ஒரு நிகழ்வாக அமைந்துவிட்டது. இந்த இளம் வயதில் இவ்வளவு துணிவாக மூன்று தமிழர்களின் உயிரை காப்பதற்காக தன் உயிரை தீக்கிரையாக்கியிருப்பது நம் அனைவராலும் எண்ணிப்பார்க்க முடியாத ஒரு வேதனை.
நேற்று வழக்கு மன்றத்தில் முடிவு தெரிந்ததும் நான் உடனே வேலூர் சிறைக்கு சென்றேன். எதுக்குமே கண்கலங்கமாட்டான் என் மகன். ஆனால் நேற்று என்னைப்பார்த்ததுமே கண்கலங்கினான்.
எல்லாம் முடிந்துவிட்டது. இனிமே வெற்றிதான். வெற்றியை நோக்கி நாம் போகவேண்டியதுதாண்டா என்று சொன்னேன்.
எனக்கு அதப்பற்றி வருத்தம் இல்லம்மா. அது தானா நடக்கும். முழுமையா மகிழ்ச்சியடையும் நிலை இல்லையே. அந்த பொண்ணு ( செங்கொடி) ஏம்மா இந்த வேலையை செய்தது. நான் காலம் முழுவதும் எண்ணி வருந்தக்கூடிய வேலையை செய்துவிட்டதே. இரவெல்லாம் என்னால தூங்க முடியல. இதுதான் என் மனசுல ஆறாத வடுவாக ஆகிவிடும்னு நினைக்கிறேன்.
நம் குடும்பத்தில் ஒருத்தி ஆகிவிட்டாள். அவள் பெண்போராளி என்று சொன்னான்.
என் மகன் விடுதலை ஆனால் கூட நாங்கள் முழுமையான மகிழ்ச்சி அடைய முடியாது'' என்று கூறினார்.
http://kaamakkathai.blogspot.com
http://kaamakkathai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?