Friday, 2 September 2011

ரொறன்ரோவில் இடம��பெற்ற உலகத் தமிழ் பேரவையின் பொது���்கூட்​டம்



தாயகத்தில் தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கச்சார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் உலகத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கனடா, ரொறன்ரோவில் இடம்பெற்றது.

கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் ஆவணி 28ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழு மணியளவில் ஆரம்பமான, இக்கூட்டத்தில், முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான , உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும், உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்களும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.

அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் முதலில் உரை நிகழ்த்திய அருட்கலாநிதி இம்மானுவேல் அடிகள், உலகெங்கிலும் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை ஒன்றிணைப்பதன் மூலம் இப்பேரவையானது 2009 ஆம் ஆண்டு ஆவணி (ஆகஸ்ட்) மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் 14 நாடுகளிலுள்ள அமைப்புகளுடன் பிரதிநிதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, உலகத் தழிழ் பேரவைக்கான அரசியல் யாப்பும் உருவாக்கப்பட்டது.

உலகத் தமிழ் பேரவையை சம்பிரதாய பூர்வமாக 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர், மற்றும் பிரித்தானிய எதிர்க்கட்சிகளின் வெளிநாட்டுக் கொள்கைக்கு பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சர்வதேசமயமான, சுயாதீனமான, ஜனநாயகப் பண்புகளோடு அகிம்சாவழியில் இப்பேரவையின் கருத்துருவாக்கம் அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உலகத் தமிழர் பேரவை ஆரம்பிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

உலகத் தமிழர் பேரவையின் உடனடியான இலக்குகளாக அன்று வதை முகாம்களில் வாடும் எமது உறவுகள் தாயகபூமியில் இயல்புநிலை வாழ்க்கைக்கு திருப்புவதற்கு பாடுபடுவதும், தொடர்ந்து இனப்படுகொலையின் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்துவதற்கு உழைப்பதுவுமாகவும், மேலும் ஐந்து கண்டத்திலும் வாழும் தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பேரவையின் முதன்மை இலக்குகளாக வரையறுக்கப்பட்டன என தனது உரையில் தெரிவித்தார்.

அத்துடன் அறுபத்தைந்து நாடுகளில் தனது தூதுவர்கள் ஊடாக தனது இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசை புலம்பெயர்ந்த உலகத்தமிழர்கள் ஒவ்வொருவரும் தமிழ் மக்களின் தூதுவர்களாக அர்ப்பணிப்புடன், இதய சுத்தியுடன் இலட்சியத்தில் அசையாத பற்றுடையவர்களாகச் செயல்பட்டு தம்மாலான வழிகளில் சிங்கள் அரசின் சதிகளை முறியடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள் இதுவரைகாலமும் உலகத் தமிழர் பேரவை எமது தாயக மக்களுக்கு நீதி கிடைக்க, ஒடுக்கு முறைகளை நீக்க குறிப்பாக முள்ளிவாய்க்கால் அவலத்திற்க்கு பின்னர் ஆற்றிய செயற்திட்டங்களை விளக்கினார்.

பிரித்தானிய சனல் நாலு ஊடக தொலைக்காட்சி போர்குற்ற ஆதாரங்களை எமக்காக பெற்று சர்வதேச ரீதியில் காண்பிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்வதேச தாக்கங்கள் பற்றிக் கூறினார்.

அதேவேளை இந்தவிதமான ஆதாரங்களை, இன்றைய தாயக நிலைமைகளை மனதில்கொண்டு சாதாரணமக்கள் கூட தம்மால் முடிந்தளவுக்கு தமது நாடுகளில் தமிழரல்லாதவர்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உலகத் தமிழர் பேரவையின் அழைப்பையேற்று ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் மண்டபத்தை நிறைந்திருந்தனர். மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பேரவை பேச்சாளர்கள் விபரமாகவும் திருப்தியாகவும் பதில்களை வழங்கினர்.

இறுதியாக பல்வேறு திட்டங்களையும் முன்னெடுக்க நிதி உதவியையும் நேரத்தையும் கோரினர். மக்களின் வசதியை கருத்தில்கொண்டு கனேடிய வங்கி ஒன்றில் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்படுள்ளதாகவும் கனேடிய மக்கள் இதில் தாமாகவே இணைந்து, மாதாந்த கொடுப்பனவுகளை மேற்கொண்டு, தாயக உறவுகளின் அரசியல் சமூக விடுதலைக்கு உதவவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள்.

மக்கள் மத்தியில் இந்தக் கோரிக்கைக்கு பலத்த ஆதரவு கிடைத்தது. மேலும் இப்பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து உழைத்த தன்னார்வத் தொண்டர்களும், பொதுமக்களுக்கு இச் செய்திகளையும் தகவல்களையும் வழங்கிய வானொலி, தொலைக்காட்சி பத்திரிகை போன்ற ஊடகங்கள் அனைத்துக்கும் உலகத் தமிழ் பேரவை பேச்சாளர்கள் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

http://kaamakkathai.blogspot.com




  • http://kaamakkathai.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger