திமுக தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அன்றாடம் ஆட்களை குறி வைத்து கைது செய்கிறார்களே?
ஏற்கனவே இருந்த நெருக்கடி கால நிகழ்ச்சிகள் இப்போது மீண்டும் தொடர்கின்றன.
உள்ளாட்சி மன்றத் தேர்தல் வரப்போகிற நேரத்தில் உங்கள் கட்சியின் வெற்றியை இது பாதிக்காதா?
திட்டமிட்டு இப்படிச் செய்கிறார்கள். இது பாதிக்கிறதா இல்லையா என்பது தேர்தல் முடிவுக்குப்பிறகு தான் தெரியும்.
5ஆம் தேதி முதல் சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஏற்கனவே இரண்டு முறை கேட்டும் ஒரே பகுதியில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அமர இடம் தரவில்லை. இப்போது உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும்?
உங்களைப் போன்றவர்கள் என்ன கருத்துக்களை சொல்கிறீர்களோ அதன்படி நடக்கும்.
பேரவையில் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழக மக்களிடையே எழுந்த எழுச்சிக்குப்பிறகு, தீர்மானம் நிறைவேற்றுகிற அளவுக்கு முன்வந்ததற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். ஆனால், அமைச்சரவையில் முடிவெடுக்க வேண்டும் என்பது முக்கியம்.
மத்திய சட்ட அமைச்சர், சட்டசபை தீர்மானம் கட்டுப்படுத்தாது என்று சொல்லியிருக்கிறாரே?
சட்ட அமைச்சர் என்ன சொன்னார் என்பது பற்றி சட்ட நிபுணர்களோடு கலந்து பேசித்தான் பதில் சொல்ல முடியும்.
http://kaamakkathai.blogspot.com
http://kaamakkathai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?