Sunday, 26 April 2015

Brain Death "மூளை இறக்குமா?..."

- 0 comments

(தயவு செய்து சிறிது நேரம் ஒதுக்கி முழுவதுமாகப் படியுங்கள்... பகிருங்கள்)

"மூளை இறக்குமா?..."
- டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M(CHINA)
Zhejiang University, Hangzhou,(China)
(Chinese Traditional Medicine).

ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம்...

பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்...

ஆனால்?...........இன்றோ!!!?

மூச்சு(சுவாசம்) இருக்கின்றது!

இரத்த ஓட்டம் இருக்கின்றது!

நாடி துடிப்பு இருக்கின்றது!

இதயத்துடிப்பும் இருக்கின்றது!

இருந்தும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று அவரின் உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பழக்கம் டாக்டர்கள் மத்தியில் மிக அதிகமாகிக் கொண்டு வருகின்றது...

உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள் இவர்கள்...

மக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது மிகவும் வேதனைப் படக்கூடிய, வெட்கப்படக்கூடிய விசயமாகும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி தமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளும் இந்த கொள்ளையர்கள், மாபெரும் பல உண்மைகளை மக்களிடம் மறைத்து விடுகின்றார்கள்...

மூளை இறக்குமா?

அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை இருக்குமா?

மூளை இறந்துவிட்டது என்று சொல்லுபவர்களே...
நீங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை இருக்குமானால், மனச்சாட்சி உள்ள டாக்டர்களாக இருப்பீர்களேயானால்...

பதில் சொல்லுங்கள்...

இறந்துவிட்டது என்று சொன்ன மூளை, உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு, இரத்த ஓட்டம், இதய துடிப்பு, நாடி துடிப்பு இவையெல்லாம் இறந்த அந்த மூளையை உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த ஒட்டம், இதய துடிப்பு, நாடிதுடிப்பு இவையெல்லாம்) நின்று விடுகின்றனவே!
ஏன்? ஏன்? ஏன்?...

காரணம் மூளை இறக்கவில்லை, மூளை இயங்கி கொண்டுதானிருக்கின்றது...

மனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை மூளையானது
இயங்கி கொண்டுதானிருக்கும்...

சிந்தியுங்கள்...
மக்களே!...
இது ஒரு மாபெரும் கொலை!...
பெரிய மோசடி!!!

இந்த கொலைக்கு மக்களும், அரசாங்கமும் துணை போவதுதான்
மிகக்கொடுமை...

உறுப்பு தானங்களுக்கு நான் எதிரியல்ல...

இறந்துவிட்ட ஒருவரின் உறுப்பை தானம் பெறுவதை நான் எதிர்க்கவில்லை...

உயிரோடு இருப்பவரின் அனுமதி பெற்று அவரின் உறுப்புகளை தானம் பெறுவதையும் நான் எதிர்க்கவில்லை...

நாம் எதிர்ப்பதெல்லாம் உடலில் முக்கிய உறுப்புகள் எல்லாம் இயங்கி கொண்டிருக்கும்போது, மூளை இறந்துவிட்டது என்று சொல்லி ஒருவருடைய மூச்சை நிறுத்தி கொலை செய்து உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத்தான்...

இப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல குடும்பங்களை வாழவைப்பதாக(?) கூறும் இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை வெளியில் சொல்லுவதில்லை!

பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதை வெளியில் சொல்லுவதில்லை!!!

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை!!!

இப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60 வயதானவர்கள் வரை இவர்களின் கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன...

இனி யாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே விழுந்துவிட கூடாது...

அப்படியே விழுந்தாலும் தவறி இவர்களிடம் போகக் கூடாது...

காரணம் மூளை இறந்துவிட்டது என்று சொல்லி கொலை செய்து
உறுப்புகளுக்கு விலைபேசி விற்று விடுவார்கள்...

இவர்கள் உறுப்புகளை தானமாக பெற்றாலும் அதை
மற்றவர்களுக்கு பொருத்தும் ஆப்ரேசனை இவர்கள் (டாக்டர்கள்) தானமாக (இலவசமாக) செய்வார்களா?...

செய்ய மாட்டார்கள்...

மக்களே!
எச்சரிக்கையாக இருங்கள்!!
இவர்களின் நோக்கம் பணம் தான்...
மக்கள் நலமல்ல!!! என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

நம் மக்களும், மலிவான பத்திரிக்கைகள் மற்றும் டி.வி விளம்பரங்களுக்கு அடிமைப்பட்டு இதற்கு உடன்படுவதுதான் ஒரு மாபெரும் வேதனை...

கோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள் "Brain Death" (மூளை இறந்துவிட்டது) என்று சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள்.

கோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர் பிழைத்து நலமாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா நிலையிலிருந்து மீண்டெழ) வாய்ப்புகள் அதிகம் உள்ள அவர்களை அவசர அவசரமாக கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன என்பது
உங்களுக்குப் புரிந்திருக்கும்...

இது ஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய கொலை என்பதால் இதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை அரசாங்கம் இவர்களுக்கு வழங்க வேண்டும்.

[Continue reading...]

Monday, 20 April 2015

ரத்னம் ‘டா’ ... ’மணிரத்னம்’ டா - வாட்ஸப்பில் பரவும் ’மணிரத்னம்’ டா ManiRathnam WhatsApp message

- 0 comments
வாட்ஸப்பில் பரவும் 'மணிரத்னம்' டா மொமெண்ட்!
தாலி கட்டாமல் வாழும் லிவிங் டுகெதர் கல்ச்சர் பற்றி 'ஓ காதல் கண்மணி' படத்தில் அலசியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இப்போது, தாலி தொடர்பான சர்ச்சைகள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது, மணிரத்னம் எடுத்துள்ள படம் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

மணிரத்னம் தாலியை பற்றி இப்போது அவர் சொல்லவில்லை. காலம் காலமாக சொல்லி வருகிறார் என்று மணிரத்னம் குறித்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைகளில் மெஸேஜ் ஒன்று ஷேர் ஆகி வருகிறது. அதில் மணிரத்னத்தின் அத்தனை படங்களையும் சேர்த்து ஒரே வரியில் கூறியுள்ளனர்.




தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே

தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் - ஓ காதல் கண்மணி 

தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்

இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்

தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்

ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்

ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்

ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா

தாலி கட்டிவிட்டு புருஷனுக்காக போராடினால் - ரோஜா

இன்னொருத்தர் மனைவிக்கு தாலி கட்டினால் - தளபதி

ரத்னம் 'டா' ... 'மணிரத்னம்' டா

இப்படி ஒரு ஃபார்வர்டு மெஸேஜ் பரவி வருகிறது வாட்ஸ் அப்பில். இப்படியும் ஒரு ட்ரெண்டா பாஸ்.
[Continue reading...]

Sunday, 19 April 2015

வாட்ஸ் அப் நகைச்சுவை தொகுப்பு whatsapp jokes collection

- 0 comments

GIRL : நீங்க சிகரெட் புடிப்பீங்கலா?

BOY : ஆமா.

GIRL : எவ்ளோ நாளா இந்த பழக்கம்?

BOY : கிட்ட தட்ட பத்து வருசமா.

GIRL : ஒரு நாளைக்கி எத்தன பாக்கெட் தம் அடிப்பீங்க?

BOY : மூனு பாக்கெட்

GIRL : அப்படினா ஒரு பாக்கெட் சிகரட் எவ்வளவு?

BOY : 40 ரூபாய்.

GIRL : அப்ப ஒரு நாளைக்கு 120 ரூவாய்(3 பாக்கெட்) செலவு பன்றீங்க.

BOY : ஆமா.

GIRL : அப்போ மாசத்துக்கு 3,600 ரூபாய்.

BOY : ஆமா.

GIRL : வருசத்துக்கு 43,200 ரூபாய்?

BOY : கரெக்ட்டா சொன்னீங்க.

GIRL : பத்து வருசத்துக்கு 4,32,000 ரூபாய்.

BOY : ஆமா.

GIRL : சிகரெட் அடிக்காம,நீங்க இந்த காச சேர்த்து வச்சிருந்தா ஒரு சான்ரோ கார் வாங்கிருக்கலாம்.

BOY : ஓ அப்படியா.!! சரி நீங்க தம் அடிப்பீங்கலா?

GIRL : ச்சீ ச்சீ எனக்கு அந்த பழக்கமே கிடையாது.

BOY : அப்போ உங்க சான்ரோ கார் எங்க நிக்கிது?

GIRL : !!!!! (speechless)

கொய்யால யாருகிட்ட வந்து அட்வைஸ் பன்னுறே.
வாய்விட்டுச் சிரிப்போம்..!!
...........................................................................

மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...

கணவன்:

அடி செருப்பால! ...

உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம

குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
..........................................................................................
பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே

எக்ஸாம் - மவனே..அவன்தான் சிக்க மாட்றான்!

சிக்கினா செத்தான்டா இதோடு..!!
............................................................................................

இன்பத்திலும் சிரிங்க..!

துன்பத்திலும் சிரிங்க!

எல்லா நேரமும் சிரிங்க!

அப்பத்தான் நீங்க

லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.
............................................................................................

மாடு போல சின்னதா இருக்கும்!

ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

என்ன தெரியலையா?

சரி,

நானே சொல்றேன்

அது கண்ணுக் குட்டி!

கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
..............................................................................................
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..

அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே!

பாசம் மனைவி மேலே இல்லடா...

பூக்காரி மேல!
....................................................................................................

அப்பா:

ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்:

எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.

அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
...............................................................................................

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட

கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட

ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன

கொடும சார் இது?....
..................................................................................................
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,

கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம்

எல்லாம் வைக்க முடியாது...

சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
.....................................................................................................

உங்கட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2. அழகு

3. நல்ல டைப்

4. கொழந்த மனசு...

5. இதெல்லாம் பொய்'ன்னு
தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
......................................................................................................
அப்பா:

நேத்து ராத்திரி பரிச்சைக்கு

படித்தேன்னு சொன்ன,

ஆனா,

உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்:

படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

😳😳
மாமனார் வீட்டுல டிவி பாக்கும்போது இந்த விளம்பரம் அடிக்கடி வந்தா கடுப்பு ஆவீங்களா?? இல்லையா??     

"நம்பிக் கட்டினோம் ... நன்றாக இருக்கிறோம்"
😳😳

[Continue reading...]

Saturday, 11 April 2015

’ஜிகர்தண்டா’ படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படம்

- 0 comments

 

'ஜிகர்தண்டா' படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா மற்றும் கருணாகரன் , நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.  இப்படத்திற்கு 'இறைவி' என பெயரிடப்பட்டுள்ளது.

 

சி.வி.குமாரின் "திருகுமரன் எண்டெர்டெயின்மெண்ட்" இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்போது ஹீரோயின்கள் தேர்வு நடந்துவருகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சிவி.குமார் கூறுகையில் "6 நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும் இன்னமும் முடிவு செய்யவில்லை" எனக் கூறியுள்ளார்.

 

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 'ஜிகர்தண்டா' வெற்றியால் இந்த படத்திற்கு சற்றே எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger