Sunday, 26 April 2015

Brain Death "மூளை இறக்குமா?..."

(தயவு செய்து சிறிது நேரம் ஒதுக்கி முழுவதுமாகப் படியுங்கள்... பகிருங்கள்)

"மூளை இறக்குமா?..."
- டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M(CHINA)
Zhejiang University, Hangzhou,(China)
(Chinese Traditional Medicine).

ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம்...

பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்...

ஆனால்?...........இன்றோ!!!?

மூச்சு(சுவாசம்) இருக்கின்றது!

இரத்த ஓட்டம் இருக்கின்றது!

நாடி துடிப்பு இருக்கின்றது!

இதயத்துடிப்பும் இருக்கின்றது!

இருந்தும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று அவரின் உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பழக்கம் டாக்டர்கள் மத்தியில் மிக அதிகமாகிக் கொண்டு வருகின்றது...

உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள் இவர்கள்...

மக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது மிகவும் வேதனைப் படக்கூடிய, வெட்கப்படக்கூடிய விசயமாகும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி தமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளும் இந்த கொள்ளையர்கள், மாபெரும் பல உண்மைகளை மக்களிடம் மறைத்து விடுகின்றார்கள்...

மூளை இறக்குமா?

அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை இருக்குமா?

மூளை இறந்துவிட்டது என்று சொல்லுபவர்களே...
நீங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை இருக்குமானால், மனச்சாட்சி உள்ள டாக்டர்களாக இருப்பீர்களேயானால்...

பதில் சொல்லுங்கள்...

இறந்துவிட்டது என்று சொன்ன மூளை, உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு, இரத்த ஓட்டம், இதய துடிப்பு, நாடி துடிப்பு இவையெல்லாம் இறந்த அந்த மூளையை உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த ஒட்டம், இதய துடிப்பு, நாடிதுடிப்பு இவையெல்லாம்) நின்று விடுகின்றனவே!
ஏன்? ஏன்? ஏன்?...

காரணம் மூளை இறக்கவில்லை, மூளை இயங்கி கொண்டுதானிருக்கின்றது...

மனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை மூளையானது
இயங்கி கொண்டுதானிருக்கும்...

சிந்தியுங்கள்...
மக்களே!...
இது ஒரு மாபெரும் கொலை!...
பெரிய மோசடி!!!

இந்த கொலைக்கு மக்களும், அரசாங்கமும் துணை போவதுதான்
மிகக்கொடுமை...

உறுப்பு தானங்களுக்கு நான் எதிரியல்ல...

இறந்துவிட்ட ஒருவரின் உறுப்பை தானம் பெறுவதை நான் எதிர்க்கவில்லை...

உயிரோடு இருப்பவரின் அனுமதி பெற்று அவரின் உறுப்புகளை தானம் பெறுவதையும் நான் எதிர்க்கவில்லை...

நாம் எதிர்ப்பதெல்லாம் உடலில் முக்கிய உறுப்புகள் எல்லாம் இயங்கி கொண்டிருக்கும்போது, மூளை இறந்துவிட்டது என்று சொல்லி ஒருவருடைய மூச்சை நிறுத்தி கொலை செய்து உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத்தான்...

இப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல குடும்பங்களை வாழவைப்பதாக(?) கூறும் இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை வெளியில் சொல்லுவதில்லை!

பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதை வெளியில் சொல்லுவதில்லை!!!

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை!!!

இப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60 வயதானவர்கள் வரை இவர்களின் கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன...

இனி யாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே விழுந்துவிட கூடாது...

அப்படியே விழுந்தாலும் தவறி இவர்களிடம் போகக் கூடாது...

காரணம் மூளை இறந்துவிட்டது என்று சொல்லி கொலை செய்து
உறுப்புகளுக்கு விலைபேசி விற்று விடுவார்கள்...

இவர்கள் உறுப்புகளை தானமாக பெற்றாலும் அதை
மற்றவர்களுக்கு பொருத்தும் ஆப்ரேசனை இவர்கள் (டாக்டர்கள்) தானமாக (இலவசமாக) செய்வார்களா?...

செய்ய மாட்டார்கள்...

மக்களே!
எச்சரிக்கையாக இருங்கள்!!
இவர்களின் நோக்கம் பணம் தான்...
மக்கள் நலமல்ல!!! என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

நம் மக்களும், மலிவான பத்திரிக்கைகள் மற்றும் டி.வி விளம்பரங்களுக்கு அடிமைப்பட்டு இதற்கு உடன்படுவதுதான் ஒரு மாபெரும் வேதனை...

கோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள் "Brain Death" (மூளை இறந்துவிட்டது) என்று சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள்.

கோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர் பிழைத்து நலமாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா நிலையிலிருந்து மீண்டெழ) வாய்ப்புகள் அதிகம் உள்ள அவர்களை அவசர அவசரமாக கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன என்பது
உங்களுக்குப் புரிந்திருக்கும்...

இது ஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய கொலை என்பதால் இதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை அரசாங்கம் இவர்களுக்கு வழங்க வேண்டும்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger