வாட்ஸப்பில் பரவும் 'மணிரத்னம்' டா மொமெண்ட்!
தாலி கட்டாமல் வாழும் லிவிங் டுகெதர் கல்ச்சர் பற்றி 'ஓ காதல் கண்மணி' படத்தில் அலசியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இப்போது, தாலி தொடர்பான சர்ச்சைகள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது, மணிரத்னம் எடுத்துள்ள படம் விவாத பொருளாக மாறியிருக்கிறது.
மணிரத்னம் தாலியை பற்றி இப்போது அவர் சொல்லவில்லை. காலம் காலமாக சொல்லி வருகிறார் என்று மணிரத்னம் குறித்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைகளில் மெஸேஜ் ஒன்று ஷேர் ஆகி வருகிறது. அதில் மணிரத்னத்தின் அத்தனை படங்களையும் சேர்த்து ஒரே வரியில் கூறியுள்ளனர்.
தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே
தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் - ஓ காதல் கண்மணி
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்
ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்
ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா
தாலி கட்டிவிட்டு புருஷனுக்காக போராடினால் - ரோஜா
இன்னொருத்தர் மனைவிக்கு தாலி கட்டினால் - தளபதி
ரத்னம் 'டா' ... 'மணிரத்னம்' டா
இப்படி ஒரு ஃபார்வர்டு மெஸேஜ் பரவி வருகிறது வாட்ஸ் அப்பில். இப்படியும் ஒரு ட்ரெண்டா பாஸ்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?