Friday, 27 February 2015

கவிஞர் தாமரை போராட்டம்

- 0 comments

தனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்று தன்னுடைய கணவர் தியாகுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக, கவிஞர் தாமரை கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமாகிய நான் இன்று உங்கள் முன் வேறொரு செய்தியோடு நின்று கொண்டிருக்கிறேன். 'சொல்லொண்ணாத் துயரம்' என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் அவற்றை உங்கள் முன் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இன்று அத்தகைய சூழல் நேர்ந்து விட்டது. மிகவும் கசப்பான சூழ்நிலைதான் என்றாலும், இதில் என் சொந்த நலன் மட்டுமல்லாது இன்னும் பலரின் வாழ்க்கை, தமிழ் இளைய தலைமுறையின் எதிர்காலம் போன்ற பொதுநலனும் கலந்திருப்பதால், நியாயம் கோரி மக்கள் முன் வரத் துணிந்தேன்.

 

மனித உரிமைப் போராளியாகவும், தமிழ்த் தேசியவாதியாகவும் தன்னை அடையாளப்படுத்திப்படுத்திக் கொள்கிற என் கணவர் தியாகு என்கிற தியாகராஜன் கடந்த 23.11.2014-ல் வீட்டை விட்டு வெளியேறித் தலைமறைவாகி விட்டார். அதன் பின் இன்று வரை நான் அவரைக் காணவில்லை. என் சிறு வயது மகனுக்குக் கூற என்னிடம் பதில் இல்லை. சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு தமிழ்த் தேசியத் தலைவர் செய்கிற செயலாக இல்லை இது

 

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அவர் வீட்டை விட்டு வெளியேற முயன்று கொண்டேயிருந்தார். அதற்காகப் பலப்பல உத்திகளைக் கையாண்டார். ஆதன் ஊடாக நான் பட்ட சித்ரவதைகளைக் கூற இயலவில்லை.எனினும் நான் பொறுமை காத்ததின் காரணம் இதில் என் குடும்ப நலன் மட்டுமின்றி, இவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் மனித உரிமை / தமிழ்த் தேசிய அரசியல் ஆகியவற்றின் மரியாதையும் அடங்கியிருந்ததுவே..!

 

2012ல் இவர் வீட்டை விட்டு ஓடிய போது சில தமிழ்த் தலைவர்கள் நல் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.

 

ஆனால் இன்று காலம் கடந்து விட்டது. எல்லாவற்றையும் ஆய்வு செய்து முடிவுக்கு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. நானும் என் மகனும் நியாயம் கோரித் தெருவிற்கு வந்திருக்கிறோம்.

 

'தமிழை நேசித்தேன், தமிழுக்காக உழைத்தேன், தமிழுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன், இன்று தெருவுக்கு வந்துவிட்டேன்.'

 

ஊரறிந்த தமிழ்க் கவிஞராகிய எனக்கு ஏற்பட்ட இந்த அவலநிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்? இதன் பின்னணி என்ன?

 

தியாகு வீட்டை விட்டு ஓட, சொல்லிக் கொள்ளும் காரணம் 'புரட்சிகர அரசியலுக்கு என்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளப் போகிறேன், அதற்குக் குடும்பம் தடையாக இருக்கிறது' என்பதுதான்.

 

அது என்ன புரட்சி, அதென்ன அரசியல்? என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அறிந்து கொண்டு தமிழ் மக்களாகிய உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் இவர் ஒன்றும் காட்டுக்குள்ளோ, யாருமற்ற தீவுக்குள்ளோ போய் புரட்சி செய்யப் போவதில்லை. தமிழ் மக்களாகிய நமக்காகத்தானே புரட்சி செய்யப் போகிறார்? எனவே அது என்னவகைப் புரட்சி, அதன் நன்மை / தீமை என்ன என்பதை அறிந்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது.

 

தியாகு 2001-ல் என்னைப் பெண் கேட்டு என் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், 'என்னோடு பொது வாழ்க்கையில் இணைந்து நிற்கும் தலைவர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரோடும் பேசி, அவர்களின் ஒப்புதலையும் பெற்றுத்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். என்னைப் போலவே தாமரையையும் அவர்கள் நன்கறிவார்கள். எங்கள் மீதும் எங்கள் உறவின் மீதும் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு என்றும் உண்மையுள்ளவர்களாக இருப்போம்' என்று உறுதி கூறியே என்னைத் திருமணம் செய்து கொண்டார்.

 

இணைவதற்கு அனுமதி வாங்கிய தியாகு, வீட்டை விட்டு ஓடுவதற்கு இவர்களிடமெல்லாம் அனுமதி வாங்கினாரா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

 

அவர்கள் முன் வந்து இதற்குப் பதில் சொல்ல வேண்டுகிறேன். அந்தப் பதிலினூடாக 'தமிழ்த் தேசியம்' என்றால் என்ன, அதன் பின்விளைவுகள் என்ன, நாளை இவர்கள் அமைக்கப் போகிற தமிழ்த்தேசத்தில் என்னவகையான விழுமியங்கள் இடம் பெறப்போகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

தமிழ் கற்றால், தமிழ்ப்பணி ஆற்ற வந்தால் தெருவுக்குத்தான் வர நேரிடும் என்பதுதான் என் வாழ்க்கை தமிழ் மக்களுக்குத் தரும் செய்தியா அல்லது தவறு, ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுமென்றாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நியாயம் கட்டாயம் வழங்கப்படும் என்பது செய்தியா என்று பார்க்க விரும்புகிறேன்.

 

என்னுடைய கோரிக்கைகள்:

 

1. வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடித் தலைமறைவான தியாகு, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு வீடு திரும்ப வேண்டும்.

 

2. நடுநிலையான ஒரு குழு அமைக்கப்பட்டு, தியாகுவின் கடந்த 20 ஆண்டு கால வாழ்க்கை விசாரணை செய்யப்பட வேண்டும்.

 

நான் கனவு கண்ட தமிழ்த் தேசம் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதற்காகத்தான் இத்தனை ஆண்டு காலம் உறக்கமின்றி உழைத்திருக்கிறேன். இப்போது அதற்கு ஊறு நேர்ந்திருப்பதாகக் கருதுகிறேன்.

 

எனவே சாரத்தில் என் போராட்டம் என்பது பொது வாழ்க்கையில், குறிப்பாக தமிழ் / திராவிடத் தமிழ் அரசியலில் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

 

எனக்கு நியாயம் கிடைக்காமல் நானும் என் மகனும் வீடு திரும்ப மாட்டோம். இறக்க நேர்ந்தாலும் தெருவிலேயே இறப்போம். எனக்கும் என் மகனுக்கும் என்ன நேரிட்டாலும் அதற்குத் தியாகுவே பொறுப்பு.

 

நியாயத்தை எடுத்துக் கூற ஒரு தமிழ்ச் சான்றோர், கூடவா இந்தத் தமிழ்ச் சமூகத்தில் இல்லாமல் போய் விடுவார்கள்?

 

Keywords: கவிஞர் தாமரை, தியாகு, தாமரை போராட்டம்

[Continue reading...]

Thursday, 26 February 2015

நடிகை சொனாக்சி சின்ஹா வின் ஆபாச வீடியோ

- 0 comments

நடிகை சொனாக்சி சின்ஹா வின் ஆபாச வீடியோ படம் இன்டர்நெட்டில் பரவி வருகிறது . நடிகைகளின் ஆபாச படம் இணையதளம் மற்றும் வாட்ஸ் அப் களில் தொடர்ந்து வருகின்றன.. கதாநாயகிகள் ராதிகா ஆப்தே , வசுந்தரா , ஸ்ரீ திவ்யா போன்றோர்களின் படங்கள் சமீபத்தில் வலி வந்தன.. படுக்கையறை மற்றும் குளியலறைகளில் ஆடையின்றி இருப்பது போன்ற படங்கள் . நடிகை லக்ஷ்மி மேனன் பெயரில் ஆபாச வீடியோ வும் வெளி வந்தன. இதனை அவர்கள் மறுத்தனர்.. லக்ஷ்மி மேனன் கூறும்போது ஆபாச படத்தில் இருப்பது நான் இல்லை என விளக்கம் அளித்தார். ராதிகா ஆப்தே மார்பின் மூலம் தனது தலையை ஆடை இல்லாத வேறு பெண்ணுடன் ஒட்டி வெளியிட்டுள்ளனர்..நடிகை ஹன்சிகா பெயரிலும் ஆப்பச குளியல் வீடியோ உள்ளது... இதன் வரிசையில் தற்போது சொனாக்சி சின்ஹா ஆபாச படம் வெளிவந்துள்ளது .. அனால் வீடியோ வில் இருப்பது தான் அல்ல என்று நடிகை மறுத்துள்ளார்... ..

சொனாக்ஷி சின்ஹா தமிழில் லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகை ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் 'How Old Are you'  என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்திற்கு '36 வயதினிலே' என்று தலைப்பு வைத்துள்ளனர்.  'How Old Are you' படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடித்தார். இப்படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடி மிகபெரிய வசூல் சாதனை படைத்தது. இதன் தமிழ் ரீமேக்கில் நடிகை ஜோதிகா நடிக்க படத்தின் வேலைகள் முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருக்கின்றது . இந்த படத்திற்கு ''36 வயதினிலே " என தலைப்பு வைத்துள்ளனர்.. ஏற்கனேவே பாரதி ராஜா "16 வயதினிலே " என்ற பெயரில் எடுத்த படம் வெற்றி படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

Monday, 23 February 2015

விடைகொடு எங்கள் நாடே - ஜெசிக்கா Tamil Girl Jesicca

- 0 comments

விஜய் டி.வி. சார்பில் சிறந்த இளம் பாடகியாக தேர்வு செய்யப்பட்ட ஈழத்தை சேர்ந்த மாணவி ஜெசிக்கா, தனக்கு பரிசாக கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகள் வளர்ச்சிக்காக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டி.வி. சார்பில் நடததப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஈழத்தை சேர்ந்த ஜெசிக்கா என்ற மாணவி, இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இறுதி சுற்றில் ஈழத்தமிழரின் தேசிய கீதமாக போற்றப்படுகிற 'விடைகொடு எங்கள் நாடே' என்ற பாடலை, 'தோல்வி நிலையென நினைத்து' என்ற பாடலுடன் இணைத்து ஜெசிக்கா பாடிய போது, அரங்கத்தில் குழுமியிருந்த விருந்தினர்கள் உள்ளிட்டோர் கண்களில் கண்ணீர் தேங்கியது. ஜெசிக்கா பாடி முடிக்கவும் நடுவர்கள் உள்ளிட்டோர் எழுந்து நின்றி கை தட்டினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் தனுஷ்,''இளம் வயதில் ஈழத்தமிழரின் வலிகளையும் வேதனைகளையும் தனது பாடலால் பதிவு செய்ய ஜெசிக்காவை பாராட்ட வார்த்தைகளே இல்லை'' என்றார்.

ஆனால் உண்மையிலேயே ஜெசிக்கா செய்த அடுத்த செயலுக்கு பாராட்ட வார்த்தைகள் கிடையாது. இந்த நிகழ்வில் அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு கிலோ தங்கத்தையும், தமிழக மற்றும் ஈழப்போரினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகளின் வளர்ச்சிக்காக வழங்குவதாக ஜெசிக்காவின் பெற்றோர் அறிவித்த போது, அரங்கத்தில் கூடியிருந்த ஒவ்வொருவரும் உருகிதான் போனார்கள்.

தற்போது கனடாவில் வசித்து வரும் ஜெசிக்கா...''இது போன்ற போட்டியில் வெற்றி பெறுவதை விட எங்கள் மக்களின் வலிகளை பதிவு செய்ததையே வெற்றியாக கருதுகிறேன்'' என்றார்.

ஜெசிக்காவின் இந்த அறிவிப்பு உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது தாய் தமிழகத்தையும் நெகிழச் செய்தது.!

உன் போன்ற பிஞ்சு நெஞ்சங்களில் உள்ள

உணர்வு பெரிய பதவிகளில் உள்ள பெரியவர்களிடம்

இல்லையே ? வணங்குகிறோம் , வாழ்த்துகிறோம் !!

[Continue reading...]

Thursday, 12 February 2015

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்

- 0 comments

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.

1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். www.puradsifm.com

4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

இயற்கை முறைக்கு மாறுவோம்

[Continue reading...]

Tuesday, 10 February 2015

வாய் துர்நாற்றத்தை தவிர்க்க.. The most common cause of bad breath

- 0 comments

வாய் துர்நாற்றத்தை தவிர்க்க... நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேச முடியாது. ஏனெனில் அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை தர்மசங்கட நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக இத்தகைய துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியாக வாயை பராமரிக்காமல் இருப்பது மட்டுமின்றி, இன்னும் வேறு பல காரணங்களும் உள்ளன. ஆனால் அந்த காரணங்களைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. துர்நாற்றம் அடிப்பதற்கு வாய் வறட்சியும் ஒரு காரணம். பொதுவாக இந்த நிலையானது வாயின் வழியாக சுவாசிக்கும் போது ஏற்படும். இப்படி வறட்சி அடைவதால், வாயில் உள்ள எச்சில் வறண்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே எப்போதும் மூக்கின் வழியாக சுவாசித்துப் பழகுங்கள். மௌத் வாஷ் பயன்படுத்தினால் வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் சரியான மௌத் வாஷ் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஆல்கஹால் குறைவாக உள்ள மௌத் வாஷ்களை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மூக்கு ஒழுகல்: சளி அல்லது மூக்கு ஒழுகல் இருந்தால், மூக்கின் வழியாக சுவாசிக்க முடியாமல், வாயின் வழியாக சுவாசிப்போம். மேலும் காய்ச்சல் இருந்தால் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருக்கும். காலை உணவு: பெரும்பாலானோர் காலையில் அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று காலை உணவை உட்கொள்ளாமல் செல்வார்கள். ஆனால் காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தாலும், வாய் துர்நாற்ற பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். எனவே சரியான வேளையில் உணவுகளை உட்கொண்டு வர வேண்டும். கார்போஹைட்ரேட் குறைவான உணவு: டயட் என்ற பெயரில் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே சரியான முறையில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்து வாருங்கள். ஆல்கஹால்: ஆல்கஹால் பருகி னாலேயே நாற்றம் வீசும். ஏனெனில் ஆல்கஹால் வாயை வறட்சியடையச் செய்து, வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கிறது. ஆகவே ஆல்கஹால் பருகுவதை நிறுத்துங்கள். உணவில் சேர்க்கும் பொருட்கள்: உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிட்டால் கூட, வாய் துர்நாற்றம் வீசும். ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை உட்கொண்ட பின்னர் புதினா அல்லது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்கும். தண்ணீர்: தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அப்படி போதிய அளவில் தண்ணீரை குடிக்காமல் இருந்தால், அது கூட வாய் துர்நாற் றத்தை ஏற்படுத்தும். மேலும் தண்ணீரானது வாய் வறட்சியை தடுப்பதுடன், எச்சில் உற்பத்தியை அதிகரிக்கும். கல்லீரல் கோளாறு: இன்னொரு காரணம் என்னவென்றால், கல்லீரலில் பிரச்னை இருந்தாலும், வாய் துர்நாற்றம் வீசும். எனவே வாயை நன்கு பராமரித்து வந்து, மேற்கூறியவற்றை பின்பற்றிய பின்னரும் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் உடலில் அம்மோனியாவானது அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் தான் வாய் துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு சிகிச்சை அவசியம். The most common cause of bad breath

heart,kidney,health,greens,yoga,child care,pregnancy care,water,food habits,relationship,natural food,ayurvedic,herbal,baby care,teeth care,vitamins,blood pressure

[Continue reading...]
- 0 comments

1.       நயன்தாரா

நயன்தாரா தமிழில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். இவர் தமிழில் "ராஜா ராணி" மற்றும் "இது கதிர்வேலன் காதல்" ஆகிய வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளார். தற்பொழுது இவர் தமிழில் ஐந்து படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் 2014ல் தமிழில் ஒரு படமும், பிற மொழிகளில் ஒரு படமும் நடித்திருந்தார். அவை மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன.

2.       சமந்தா

இவர் தமிழ் நடிகைகளின் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். சமந்தா தாம் குறுகிய காலத்திலேயே அதிக படங்களில் நடித்து தமிழ் திரைப்பட உலகில் தமக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். இவர் நடித்த திரைப்படமான "அஞ்சான்" தோல்வியை தழுவினாலும், அடுத்த படமான "கத்தி" மாபெரும் வெற்றியைத் தழுவியது. இவர் மேலும் "10என்றதுக்குள்ள" என்ற படத்தில் பணியாற்றி வருகின்றார்.

3.        ஹன்சிகா

இவர் தமிழ் நடிகைகளின் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 2014ல் 3 படங்களும் 2015ல் ஒரு படமும் நடித்துள்ளார். மேலும் 6 படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடித்த படங்களில் "அரண்மனை" மற்றும் "ஆம்பள" ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

4.       அனுஷ்கா

நடிகை அனுஷ்கா தமிழில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். தெலுங்கு நடிகையான இவர் தமிழில் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தாலும் தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து முதலிடத்தியே பெற்றுள்ளார். இவர் தமிழில் 2014 மற்றும் 2015ல் மொத்தம் இரண்டு படங்களை நடித்துள்ளார். இவர் நடித்த "லிங்கா" படமானது சுமாரான வெற்றியைத்தழுவினாலும் "என்னை அறிந்தால்" மாபெரும் வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

5.       காஜல் அகர்வால்

இவர் தமிழ் நடிகைகளின் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஏனெனில் கடந்த வருடத்தில் நடிகை "காஜல் அகர்வாலுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. இதன் மூலம் தனது நடிப்பை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் மூலம் சினிமா நடிகைகளின் வரிசையில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

[Continue reading...]

உலகத்தின் ஒளிச்சுடர் எடிசன்

- 0 comments

ஒளிச்சுடர் :-எடிசன் உலகத்தின் ஒளிவிளக்கு ;நீ அன்று இந்த ஒளியை காணாது இருந்தால் நாங்கள் இருட்டிலே உலகை தேடி கொண்டு இருந்து இருப்போம் ;மனித உலகத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு நாயகனே; உனக்கு தான் சிலைகள் இல்லை

[Continue reading...]

People wave இது தான் உண்மையான மக்கள் அலை !

- 0 comments

 

இது தான் உண்மையான மக்கள் அலை! மோடி அலையெல்லாம் எதுவுமில்லை.. அரவிந்த்க்கு வரலாறு மற்றொரு சிறப்பான வாய்ப்பை கொடுத்திருக்கிறது.. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டாரென்றால் இளைய தலைமுறைக்குஅரசியலுக்குள் நுழைவதற்கான மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கும் அது.. not Narendra Modi wave.. this only people wave...

 

[Continue reading...]

முதல் அடியே மரண அடியாக BJP Delhi status

- 0 comments

எட்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் 7 நாடாளுமன்ற தொகுதிகளையும் பாரதிய ஜனதா அளித்த வாக்காளர்கள் தற்போது, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட அளிக்கவில்லை. எட்டு மாதங்களாக இந்துத்துவா அமைப்புகள் தெரிவித்த கருத்துகள், அதற்கு மோடியின் மவுனம், பெரிய மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது போன்றவை இந்த படுதோல்விக்கு காரணமாகியுள்ளது. முதல் அடியே மரண அடியாக உள்ளது. இனியாவது பேச்சு மட்டும் இல்லாமல் செயல்பட வேண்டிய நேரம். காங்கிரசிற்கு மாற்றாக தான் மராட்டியம், ஹரியானா மாநிலங்களில் பாரதிய ஜனதாவை தேர்ந்தெடுத்தார்கள் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

 

[Continue reading...]

New Delhi political news புது டெல்லி அரசியல்

- 0 comments

Karikalan Karkki புது டெல்லி அரசியல் வரலாற்றில் ஏழாவது முதல்வராக கெஜ்ரிவால் பதவி ஏற்க உள்ளார்.அதுபோல் காங்கிரஸ் பிஜேபி அல்லாத முதல் ஆட்சி டெல்லியில் மலர இருக்கிறது. முன்பு 49 நாட்கள் மட்டுமே தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவரால் ஆட்சி புரிய முடிந்தது.அப்போது அவர் எடுத்த தவறான முடிவுக்காக திறந்த மனத்தோடு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.மக்கள் அதை ஏற்று மறுவாய்ப்பு அளித்துள்ளனர். இத்தேர்தலில் காங்கிரசின் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துவிட்டது பரிதாபத்துக்குரியது.இம்முறை முஸ்லீம் வாக்காளர்கள் காங்கிரசைப் புறக்கணித்து ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளனர். மோடி அணிந்த விலை உயர்ந்த சூட்கள் மக்களிடம் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.மாறாக மப்ளர் அணிந்த கெஜ்ரிவாலின் நடுத்தர வர்க்கத் தோற்றமோ மக்களிடம் ஆதரைப் பெற்றது. மேலும் கலகக்காரர் என்கிற இமேஜையும் இந்த தேர்தலின் மூலம் கடந்து வந்திருக்கிறார்.பிரச்சாரத்தில் எங்கும் தன் பழைய சகாவான பேடியை அவர் விமர்சிக்கவே இல்லை.மதத்தை தேர்தல் பிரச்சனையாக்காமல் தவிர்த்ததும் புத்திசாலித்தனமான முடிவு. புது டெல்லியில் 75% சதவீத வாக்குகளைப் பெற்று புதியசாதனை படைத்திருக்கும் கெஜ்ரிவால்மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க வேணடும் என்பதே நம் விருப்பம். காத்திருப்போம்.

 

[Continue reading...]

Tamil Doctor Jokes அவர் ஒரு போலி மருத்துவர்

- 0 comments

 

நண்பர் 1: மச்சி அவரு ஒரு போலி டாக்டர்தா !!!!

நண்பர் 2: எதவச்சு அப்படி சொல்லுற மாமு ???

நண்பர் 3: இல்லடா நோயாளிகளின் blood test , 

 

urine test எல்லாம் திருத்த அனுபவம் வாய்ந்த 

 

ஆசிரியர் தேவை என்று விளம்பரம் போடிருக்கார்டா !!!

 

[Continue reading...]

Monday, 9 February 2015

ரத்த அழுத்தம் அதிகரித்தால்

- 0 comments

எனக்கு வயதாகிவிட்டது. உயர் ரத்த அழுத்தத்தின் அளவு குறையமாட்டேன் என்கிறது. என்ன செய்யலாம்?

வயோதிகர்களுக்கு ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருப்பது இயல்பானதும் ஆரோக்கியமானதும் என்றே சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக, இதயச் சுருக்க அழுத்தம் உள்ளவர்களுக்கு 150 வரை ரத்த அழுத்தம் இருக்கலாம். இதற்கு மருந்து எடுக்க வேண்டிய அவசியமில்லை.

தீவிரச் சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து இருப்பவர்கள் என்னவிதமான பக்கவிளைவுகளை அதிகம் சந்திக்கின்றனர்?

தீவிரச் சிகிச்சைப் பிரிவில் நீண்ட நாட்கள் இருந்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு தர்க்க அறிவில் குறைபாடு ஏற்படும். மூன்றில் ஒருவருக்கு அல்சைமர் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இப்பிரச்சினை சீக்கிரம் தீரவும் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைஹீல்ஸ் செருப்புகள் மற்றும் ஷூக்களை அணிவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன?

உயர்குதிகால் செருப்புகளை அணிபவர்களின் உடல் எடை முன்னோக்கிச் சரிந்துவிடுகிறது. அதனால் கால்நுனியில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் உடல் முன்னோக்கி சரிகிறது. இதைச் சமன்படுத்த உடல் பின்னோக்கி வளைக்கப்படுகிறது. இதனால் உடல் நிரந்தரமாகப் பாதிக்கப்படும்.

கழுத்தை எந்த நிலையில் வைத்துப் புத்தகத்தை வாசிப்பது உடலுக்கு நல்லது?

தலையை உயர்த்தி வைத்து, நேராகப் படிக்க வேண்டும். இந்த நிலையில் உங்கள் தலை முதுகெலும்பின் மீது சரியானபடி இருக்கும். அதனால் கழுத்துத் தசைகளுக்குச் சிரமம் இருக்காது.

சத்துக்கான கால்சியம் கூடுதல் பொருட்களை எப்போது உட்கொள்வது ஆரோக்கியமானது?

சாப்பாட்டுடனோ, சாப்பாட்டுக்குக் கொஞ்சம் பிறகோ உட்கொண்டால் கால்சியம் உடலில் சேரும்.

கால்சியம் சத்துக்குப் பாலைத் தவிர்த்து எந்தெந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்?

சாளை மீன்கள் மிக அதிகக் கால்சியம் சத்தைக் கொண்டவை. எலும்புடன் கூடிய 3.5 அவுன்ஸ் சாளை மீன்களில், 351 மில்லிகிராம் எலும்புச்சத்து இருக்கும். ஒரு கோப்பை ஓட்சில் 215 மில்லிகிராம் கால்சியம் உண்டு. முள்ளங்கிக் கீரை, பட்டர் பீன்ஸ், அத்தி, பாதாம், பிராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம்.​

[Continue reading...]

Saturday, 7 February 2015

ரஜினிக்கு அடுத்து அஜீத் - ஓபனிங் வசூல்

- 0 comments

ஓபனிங் வசூல் - ரஜினிக்கு அடுத்து அஜீத், விஜய்க்கு நான்காவது இடம்

அஜித் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் விழாகோலம் பூண்டுள்ள படம் 'என்னை அறிந்தால்'. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்துள்ளார்கள். மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மேலும் உலகமெங்கும் அதிகப்படியான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இப்படத்தின் முதல் நாள் வசூல் மற்ற படங்களை விட அதிக வசூல் படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் ரூ.12.80 கோடியும், கேரளாவில் ரூ.3.75 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.54 கோடியும், பிற மாநிலங்களில் ரூ.1.36 கோடியும், வெளிநாடுகளில் ரூ.9.75 கோடியும் என மொத்தம் 30.20 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வசூல் சாதனை படைத்த புதுப்படங்களில் என்னை அறிந்தால் 2வது இடத்தை பிடித்ததாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் முதல்நாள் வசூல் ரூ.37 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது. லிங்கா முதலிடத்திலும் என்னை அறிந்தால் இரண்டாவது இடத்திலும் இடம் பெற்றிருக்கிறது. விக்ரம் நடிப்பில் வெளியான '' ரூ.27 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்திலும், விஜய்யின் 'கத்தி' ரூ.23 கோடி வசூல் செய்து நான்காவது இடத்திலும் உள்ளது.

இதேபோல் என்னை அறிந்தால் படம் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை படைக்க உள்ளது. இதுவரை தமிழில் வெளிவந்த எந்த படத்திற்கும் இல்லாத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்து வருகிறது. அதேபோல், முதல் நாள் வசூலிலும் இப்படம் சாதனை படைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அமெரிக்காவில் இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு 98 திரையரங்குகளில் வெளியான இப்படம் அங்கு முதல்நாள் மட்டும் 1,13,232 டாலர்கள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் 75 திரையரங்குகளில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் துபாய், மலேசியா ஆகிய நாடுகளிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அஜித்தின் எந்த படத்திற்கும் இல்லாத வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்திருப்பதால் அஜித் மற்றும் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளன

[Continue reading...]

Thursday, 5 February 2015

‘என்னை அறிந்தால்’ பார்க்கலாம்

- 0 comments

அஜித் படத்தில நின்னாக் கைதட்டுறாங்க. நடந்தா கைதட்டறாங்க. அவர் தலைமுடி வெளுப்பா இருந்தாலும் கைதட்டறாங்க, கறுப்பா இருந்தாலும் கைதட்டறாங்க. காக்கி யூனிபார்ம் போட்டாலும் கைதட்டல், ஷார்ட்ஸ் போட்டுவந்தாலும் கைதட்டல்

'காக்க காக்க' பார்த்திருக்கீங்களா? 'வேட்டையாடு விளையாடு' பார்த்திருக்கீங்களா? 'வாரணம் ஆயிரம்'...? பார்க்கலையா?, அப்போ 'என்னை அறிந்தால்' பாருங்க. எல்லாப் படத்தில் இருந்தும் குட்டிக்குட்டியாப் பார்க்கலாம். ஒருவேளை மேலே சொன்ன எல்லாப் படங்களையும் நீங்க பார்த்திருந்தாலும், அதெல்லாம் சேர்த்து ஒரு படமா பண்ணினா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கிறதுக்காக 'என்னை அறிந்தால்' பார்க்கலாம். அஸ் யூஷுவல் கௌதம் வாசுதேவ் மேனனின் போலீஸ் ஸ்டோரி படம்.

 

'காக்க காக்க'வில் இருந்து போலீஸ் & கேங்ஸ்டர் மோதல், 'வேட்டையாடு விளையாடு'வில் இருந்து நண்பனின் மகளைக் கடத்திப் போனவனைப் பற்றிய தேடல், டைவர்ஸ் ஆன பெண்ணுடன் கோடு தாண்டாத காதல், 'வாரணம் ஆயிரம்' படத்தில் வர்ற அன்பான அப்பா, மனசு விரக்தியாகறப்போ தூரதேசத்தில போய் அலையற வாழ்க்கை இதையெல்லாம் ஒரு கிளாஸ்ல போட்டுக் கலக்கி, அதில் அஜித்தை முக்கி எடுத்தா 'என்னை அறிந்தால்'.

 

 

 

கதை நாம பல படங்களில் பார்த்ததா இருந்தாலும் கௌதம் மேனன் அதைச் சொல்லியிருக்கிறவிதமும் ஸ்டைலும்தான் படத்தைத் தூக்கி நிறுத்துது. குறிப்பா, அஜித்துக்கான ஹீரோயிஸ பில்டப்களைக் கதையோட்டத்திலேயே வெச்சிருக்கார். அஜித் படத்தில நின்னாக் கைதட்டுறாங்க. நடந்தா கைதட்டறாங்க. அவர் தலைமுடி வெளுப்பா இருந்தாலும் கைதட்டறாங்க, கறுப்பா இருந்தாலும் கைதட்டறாங்க. காக்கி யூனிபார்ம் போட்டாலும் கைதட்டல், ஷார்ட்ஸ் போட்டுவந்தாலும் கைதட்டல். ஆனா, ரொம்பகாலமா கோட்டும் கூலிங்கிளாஸும் போட்டுக்கிட்டு நீண்டதூர நடைபயணம் போயிக்கிட்டிருந்த அஜித், இந்தப் படத்தில் வெவ்வெறு கெட்டப்கள், வெவ்வேறு எமோஷன்ஸ்னு அழகா நடிச்சிருக்கார். த்ரிஷாவோட இழப்பைத் தாங்கமுடியாம தடுமாறுறது, பொறுப்பான அப்பாவா மாறி மகளைக் கண்ணும் கருத்துமாப் பாதுகாக்கிறது, பொறுப்பான போலீஸ்காரரா விறைப்பும் முறைப்பும் காட்டுறது, த்ரிஷாவைக் கொன்னத யார், அவங்க எப்படி செத்தாங்கங்கிறது தெரிஞ்சதும் உடைஞ்சு அழுகிறதுமா நல்லா நடிச்சிருக்கார் அஜித். அதிலும் ஹீரோ அஜித்துக்கும் வில்லன் அருண்விஜய்க்கும் இடையில் 'இன்னும் நட்பு இருக்கா, இல்லையா?'னு புரியாத ஓர் உறவு... வசனங்கள், நடிப்பு வழியா கச்சிதமா வந்திருக்கு.

 

அஜித்துக்கு அடுத்த இடம் அருண்விஜய். சில படங்களில்தான் வில்லன் ஸ்கோர் பண்றதுக்கான வாய்ப்பு இருக்கு. இந்தப் படத்தில் அருண்விஜய்க்கு எக்கச்சக்கமா இருக்கு. 'மெல்லிய கோட்டுக்கு அந்தப்பக்கம் எப்பவோ நான் போயிட்டேன். நான் நினைச்சாக்கூட கோட்டுக்கு இந்தப் பக்கம் வரமுடியாது'னு அவர் சொல்றது முக்கியமான இடம்.

 

அனுஷ்காவா, த்ரிஷாவானு பார்த்தா த்ரிஷாவுக்குத்தான் நடிக்கிறதுக்கான வாய்ப்பு. அஜித்துடனான ரொமான்ஸ் காட்சிகளில் கண்களிலேயே காதலைக் கொட்டுறாங்க த்ரிஷா. அனுஷ்காவுக்கு அய்யோ பாவம் மாதிரியான இடம்தான். விமானத்தில் சின்னதாச் சரக்கடிச்சுட்டு வாந்தி எடுக்கிற இடம் ரசிக்கவைக்குது. வாந்தி எடுக்கிறதில என்னடா ரசிக்கிறதுக்கு இருக்குனு கேட்கறீங்களா? என்ன பண்றதுங்க, அதுக்கப்புறம் வர்ற சீன்களில் அனுஷ்காவுக்கு நடிக்கிற வாய்ப்புகளே இல்லையே! வழக்கமான தமிழ்சினிமாவில வழக்கமான ஹீரோயினுக்கு வர்றமாதிரி அஜித்தைக் கண்டவுடன் காதல். பெப்பர் சால்ட் தலையோட இருக்கிற அஜித்தைப் பார்த்து 'இந்த உலகத்திலேயே அழகானவர் நீங்கதான்'கிறாங்க. அடடடா...

 

ஹாரிஸ் இசையில் 'அதாரு உதாரு' பாடல் தெறி மாஸ்னா 'உனக்கென்ன வேணும் சொல்லு' பாட்டு செம மெலோடி. ஆனா 'அன்பே ஆருயிரே' பாட்டு, எங்கேயோ சுட்ட மாதிரி இருக்கு. பின்னணி இசை ஓ.கே.தான் என்றாலும் அஜித் படத்துக்கான மாஸ் இல்லைனுதான் சொல்லணும்.

 

 

 

படத்தில நெருடற சில விஷயங்களைச் சொல்லியே ஆகணும்.

 

இப்போல்லாம் எவ்வளவோ டெக்னாலஜி முன்னேறியாச்சு. தமிழ்சினிமாக்களிலேயே தாறுமாறு தக்காளிச்சோறு கிண்டறாங்க. ஆனா கடத்தப்படற தன் மகளோட கையில் ஜி.பி.எஸ் வாட்ச் கட்டி, அஜித் கடத்தல் வண்டியை ட்ராக்கிங் பண்றதெல்லாம், ஸாரி கௌதம் உங்க வாட்ச் ரொம்ப லேட்டா ஓடுது. அதேமாதிரி அருண்விஜய் க்ளைமாக்ஸ்ல செல்போனோடுதான் அலையறார். அவரே ஒரு இடத்தில் கேட்கிறார், 'இன்னுமா நான் இருக்கிற இடத்தை நீங்க ட்ரேஸ் பண்ணலை?'னு. கேட்டபிறகும் அஜித் மகளைக் கடத்தவும் செய்றார். அப்பக்கூட அவர் போன் சிக்னலை வெச்சு ட்ரேஸ் பண்ணி மடக்கிறமாதிரி தெரியலை. சாலையோரத்தில இருக்கிறவங்களைக் கடத்தி உறுப்புகளைத் திருடி சேஃப்டியா விக்கிற வில்லன் கேங் அப்புறம் ஏன் ரிஸ்க் எடுத்து அனுஷ்கா மாதிரியான ஆட்களைக் கடத்தநினைக்குது. அதுவும் புரியலை!

 

வழக்கமான கௌதம்மேனன் போலீஸ் படங்களில் ஒரு துப்பாக்கியில் ஒரு லாரி தோட்டா இருக்கும். இதிலும் அப்படித்தான் கொஞ்சநேரம் டிஷ்யூம் டிஷ்யூம், அது ஓய்ஞ்சநேரம் கத்தியில் சதக் சதக். படம் முடிஞ்சு தியேட்டரை விட்டு வெளியில் வரும்போது நம்ம சட்டை ஓட்டையாகி, ரத்தத்தில் நனைஞ்சமாதிரி ஃபீலிங். அஜித்தும் ஒரு சீன்ல 'சண்டையில கிழியாத சட்டை இருக்கா?'னு வேற கேட்கிறார். அப்புறம் கௌதம்மேனன் படத்தில நிறைய இங்கிலீஷ் கெட்டவார்த்தை பேசுவாங்க. இதில அஜித்தும் பீப் சவுண்டு ஒலிக்க ரெண்டு, மூணு கெட்டவார்த்தை பேசுறார். ஆனா அத்தனையும் தமிழ். செம்மொழியான தமிழ்மொழியாம்!

[Continue reading...]

Monday, 2 February 2015

அஜீத் என்னை அறிந்தால் படத்திற்கு வரவேற்பு அதிகம் , ஏன் ?

- 0 comments
அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். இந்த ஆண்டு துவங்கி பல படங்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்திற்கு மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தள்ளித் தள்ளிச் சென்று ஒரு வழியாக வரும் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்,
என்னை அறிந்தால் படத்தை பார்க்க பலர் ஆவலாக இருப்பதற்கு முதல் காரணம் அஜீத். இது நிச்சயம் அஜீத் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அஜீத் படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவர் 4 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு ஆகிய போலீஸ் வெற்றி கதைகளை இயக்கிய கௌதம் மேனன் தான் என்னை அறிந்தால் படத்தையும் இயக்கியுள்ளார். போலீஸ் கதையை அவர் நிச்சயம் நச்சென்று சொல்லியிருப்பார் என்று பலர் நம்புகிறார்கள்.
படத்தின் கதை வலுவாக உள்ளது. படத்தில் 13 வயது சிறுவன் 38 வயதை அடையும் வரை அவரது வாழ்வில் நடப்பதை கூறுகிறார்கள். ஹீரோ தனது தாயின் ஆசையை நிறைவேற்ற எப்படி பாடுபடுகிறார் என்பதை ஆக்ஷன் கலந்து கூறுகிறார்கள்.
கௌதம் மேனன் படங்களில் ஹீரோயின்கள் மரத்தை சுற்றி சுற்றி ஹீரோவுடன் டான்ஸ் ஆடுவதோடு சென்றுவிட மாட்டார்கள். அவர்களின் கதாபாத்திரம் வலுவானதாக இருக்கும். என்னை அறிந்தால் படத்திலும் ஹீரோயின்கள் அனுஷ்கா, த்ரிஷா ஆகியோரின் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
என்னை அறிந்தால் படத்தின் ஒளிப்பதிவாளர் டான் மெக்கார்தர். ஹாலிவுட், பாலிவுட் படங்களில் பணியாற்றிய அவர் இந்த படத்திலும் அசத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger