அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். இந்த ஆண்டு துவங்கி பல படங்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்திற்கு மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தள்ளித் தள்ளிச் சென்று ஒரு வழியாக வரும் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்,
என்னை அறிந்தால் படத்தை பார்க்க பலர் ஆவலாக இருப்பதற்கு முதல் காரணம் அஜீத். இது நிச்சயம் அஜீத் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அஜீத் படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவர் 4 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு ஆகிய போலீஸ் வெற்றி கதைகளை இயக்கிய கௌதம் மேனன் தான் என்னை அறிந்தால் படத்தையும் இயக்கியுள்ளார். போலீஸ் கதையை அவர் நிச்சயம் நச்சென்று சொல்லியிருப்பார் என்று பலர் நம்புகிறார்கள்.
படத்தின் கதை வலுவாக உள்ளது. படத்தில் 13 வயது சிறுவன் 38 வயதை அடையும் வரை அவரது வாழ்வில் நடப்பதை கூறுகிறார்கள். ஹீரோ தனது தாயின் ஆசையை நிறைவேற்ற எப்படி பாடுபடுகிறார் என்பதை ஆக்ஷன் கலந்து கூறுகிறார்கள்.
கௌதம் மேனன் படங்களில் ஹீரோயின்கள் மரத்தை சுற்றி சுற்றி ஹீரோவுடன் டான்ஸ் ஆடுவதோடு சென்றுவிட மாட்டார்கள். அவர்களின் கதாபாத்திரம் வலுவானதாக இருக்கும். என்னை அறிந்தால் படத்திலும் ஹீரோயின்கள் அனுஷ்கா, த்ரிஷா ஆகியோரின் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
என்னை அறிந்தால் படத்தின் ஒளிப்பதிவாளர் டான் மெக்கார்தர். ஹாலிவுட், பாலிவுட் படங்களில் பணியாற்றிய அவர் இந்த படத்திலும் அசத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?