நான் சிகப்பு மனிதன் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்தது என்றாலும், அப்படத்தை உண்மையில் தயாரித்தது என்னவோ யுடிவி நிறுவனம்தான். யுடிவி கொடுத்த பணத்தில், தன் லாபமாக சில கோடிகளை எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தில் படத்தை எடுத்துக் கொடுத்தார் விஷால். அதன் பிறகு நான் சிகப்பு மனிதன் படத்தை பப்ளிசிட்டி செய்து வியாபாரம் செய்வதும், அதன் லாப நஷ்டமும் யுடிவியைச் சேர்ந்தது. எனவே நான் சிகப்பு மனிதன் படத்தை மார்க்கெட்டிங் செய்யும் வேலையில் யுடிவி இறங்கியபோது, அவர்களிடம் விஷால் ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்.
அதாவது, பாரிவேந்தரின் வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கும் தனக்கும் ஒரு கமிட்மெண்ட் உள்ளதாகவும், அதனால் நான் சிகப்பு மனிதன் படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டி இருக்கிறது. எனவே படத்தை என்னிடமே கொடுத்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதன்படி தமிழக தியேட்டர் ரைட்ஸை 10 கோடிக்கு விஷாலுக்குக் கொடுத்திருக்கிறது யுடிவி. விஷாலோ அதை 11 கோடிக்கு வேந்தர் மூவிஸுக்கு விற்றிருக்கிறார். 11 கோடிக்கு வாங்கிய வேந்தர் மூவிஸ் சில கோடிகள் லாபம் வைத்து தியேட்டர்காரர்களுக்கு பிரித்து விற்றிருக்கிறார்.
நெட் ரிசல்ட் என்ன? நான் சிகப்பு மனிதன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் தியேட்டர்காரர்களுக்கு சுமார் 25 சதவிகிதம் நஷ்டமாம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?