நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் நட்சத்திரங்கள் பலரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்களித்த கை(மை)யோடு, அதை ஃபோட்டோ எடுத்து ட்விட்டரில் ஷேர் பண்ணி சீன் போட்டனர். வழக்கமாக தேர்தல் அன்று காலையிலேயே உற்சாகமாக வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் சிரிப்பு நடிகர் வடிவேலு. சென்னை, சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு காலை நேரத்திலேயே வந்துவிடுவார். வாக்களித்துவிட்டு, மீடியாக்களின் கேமரா முன்பு நின்று முழங்குவார். இந்த தேர்தலில் வடிவேலுவின் முழக்கம் கேட்கவில்லை. என்ன காரணம்?
விஜயகாந்த் வாக்களிப்பதும் வடிவேலு வாக்களிக்கும் அதே வாக்குச்சாவடியில்தான். எனவே, காலை நேரத்தில் வாக்களிக்க வந்தால் அங்கே திரண்டு நிற்கும் விஜயகாந்தின் கட்சித்தொண்டர்களினால் தனக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்ற நினைத்தாராம். ஏற்கனவே ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் நமக்கு இந்த நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பது வடிவேலுவின் அச்சம். எனவேதான், விஜயகாந்தின் தொண்டர்கள் கூட்டம், மீடியாக்கள் இல்லாத நேரமாகப் பார்த்து...அதாவது வாக்குப்பதிவு முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வந்து வாக்களித்து விட்டு சென்றிருக்கிறார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?