ஆனால், அந்த சந்திப்பு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்றாலும் அதை டீசன்டாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு பிரபலமில்லாத அரசியல்வாதி விஜய்யை கண்டபடி அசிங்கமாகவும், ஆபாசமாகவும் திட்டி பேசியுள்ளார். அவரை மட்டுமின்றி ஒட்டு மொத்த நடிகர்களையே அருவருப்பான ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார்.
அதேசமயம், அவர் யார்? எங்கு நடைபெற்ற கூட்டததில் இப்படி பேசினார் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. ஆனால், அவரது பேச்சு யு-டியுப்பில் வெளியானதையடுத்து சமூக வலைதள நேயர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் நின்று பேசிய மேடையில் உள்ள கட்சியின் கொடியை வைத்து அவர் ஒரு மதவாத கட்சியைச்சேர்ந்தவர் என்பது அறியப்பட்டுள்ளது.
மேடை நாகரீகமே தெரியாமல் அவர் பேசியுள்ள இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, விஜய் ரசிகர்களை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?