இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தபோது படத்தின் இயக்குனர் மட்டுமே கலந்து கொண்டார். நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், நயன்தாரா திறமையான நடிகை. அவரது நடிப்பைப்பார்த்து அவர் கேட்டதைவிட அதிக சம்பளம் கொடுக்கலாமா என்றுகூட நான் யோசித்தேன் என்று அவர் தெரிவித்தார்.
அதையடுத்து, சமீபத்தில் அப்படத்தின் ஆடியோ விழா ஐதராபாத்தில் நடந்தபோதும் நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்தார்களாம். ஆனால் அப்போதும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டாராம். லீடு ரோலில் நடித்த ஒரு நடிகை இப்படி வேறு படங்களில் பிசியாக இருப்பதாக காரணம் சொல்லிக்கொண்டு விழாக்களுக்கு வராமல் தவிர்ப்பதால், அப்படக்குழுவினர் நயன்தாராவை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து, தான் முக்கிய வேடத்தில் நடித்த ஒரு படத்தை நயன்தாரா தவிர்க்கிறார் என்றால், அவர்களுக்குள் ஏதோ உள் விவகாரம் இருக்கிறது. இல்லாமல் இப்படி செய்ய மாட்டார் என்று சிலர் பேசிக்கொள்கின்றனர். ஆனால் இதுகுறித்து நயன்தாராவை தொடர்பு கொண்டு விசாரித்தவர்களிடம் அவர் மெளனத்தையே பதிலாக்கி விட்டாராம்.
ஆக, ஏதோ நடந்திருக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?