Img உலகில் முதலிடம் பெற்ற தேனி மாவட்டம்: எக்டேருக்கு 120 டன் வாழை விளைச்சல் Theni district is first in the world 120 tons per hectare yield of banana
தேனி, ஜன.3–
தேனி மாவட்டத்தில் தற்போது 8 ஆயிரம் எக்டேரில் வாழை சாகுபடி நடக்கிறது. ஜி 9, நேந்திரன் ரகங்களில் திசு வாழைகள் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. ஜி 9 திசு வாழை சாகுபடியில் தேனி மாவட்ட விவசாயிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
சராசரியாக 1 எக்டேருக்கு 120 டன் வாழை விளைச்சல் எடுத்துள்ளனர். மிகவும் குறைந்தபட்ச சாகுபடி அளவே 90 டன் என்ற நிலையில் உள்ளது.
இந்தியாவின் சராசரி வாழை சாகுபடி திறன் எக்டேருக்கு 50 டன்கள் ஆகும். மகாராஷ்டிரா மாநிலம் இதுவரை 68 டன் விளைச்சல் எடுத்து இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது. உலக அளவில் பிரேசில், ஈக்வடார், போஸ்டாரிகா ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்திருந்தன. தேனி மாவட்ட விவசாயிகள் சராசரியாக எக்டேருக்கு 120 டன் விளைவித்து உலக நாடுகளின் பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட தோட்டக்கலை துணைஇயக்குனர் முருகன் கூறியதாவது,
தேனி மாவட்டத்தில் காமையகவுண்டன்பட்டியில் ஏராளமான விவசாயிகள் 120 டன் மேல் வாழை விளைவித்து சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் உலகளவில் வாழை விளைச்சலில் தேனி மாவட்டம்தான் முதலிடம் பெற்றுள்ளது. இந்த சாதனையை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதில் ஒரு விவசாயி 150 டன்–க்கு மேல் விளைச்சல் எடுத்துள்ளார். இது உலகில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத சாதனை. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து அந்த விவசாயி தோட்டத்தில் ஆய்வு நடத்தி வருகிறோம் என்று கூறினார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?