
பொங்கல் திருநாளை முன்னிட்டு கைத்தறி தொழிலாளர்களை சிறப்பிக்கும் விதமாக வருகிற 6ஆம் தேதி 'வேட்டி தினம்' அனுசரிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 'வேட்டி' விற்பனை பிரிவை கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த தமிழர்களின் கலாச்சார உடையான கைத்தறி வேட்டியை அனைவரும் அணிந்து வரவேண்டும். வருகிற 6ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் விருப்பப்படி வேட்டி அணிந்து பணிக்கு வர வேண்டும். பெண் ஊழியர்கள் கைத்தறி சேலை அணிந்து வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி உமா மகேஸ்வரி, நேர்முக உதவியாளர்கள் துரைராஜன், சுந்தரபாண்டியன், மக்கள் தொடர்பு அதிகாரி மாரியப்பன், மண்டல ஆய்வுக்குழு அதிகாரி தியாகராஜன், கோப்–ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுப்பிரமணியன், துணை மண்டல மேலாளர் சண்முக சுந்தரம், மேலாளர் கணபதி, அலுவலக மேலாளர் தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். * * * அரசு ஊழியர்கள் வருகிற 6–ந்தேதியன்று வேட்டி தினம் கொண்டாடுகின்றனர். இதற்காக கோ–ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை தொடங்கி உள்ளது. அதில் கலந்து கொண்ட நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் வேட்டி வாங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?